நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வாழ்க்கை இவ்வளவு அழகாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கிடையே , தாஸ்வி படத்தில் தன்னுடன் நடித்த நிம்ரத் கவுருடன் அபிஷேக் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை நடிகை நிம்ரத் மறுத்திருந்தார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். நான் என் வேலையில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறியிருந்தார். அபிஷேக் பச்சன் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது 51 வது பிறந்த நாளை நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடினார். அப்போது, கணவர் அபிஷேக்பச்சன் , அமிதாப் உள்பட யாருமே சோசியல் மீடியாவில் வாழ்த்து சொல்லவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. இதனால், ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
அமிதாப்பச்சன் தன் மகள் ஸ்வேதாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஐஸ்வர்யா ராயை புறக்கணிப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உண்டு. இந்த நிலையில், அமிதாப் குடும்பத்துக்கு நெருக்கமான நடிகை சிமி கர்வெல், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உங்களுக்கு முழுமையாக தெரியாத எந்த விஷயத்தையும் பற்றி பேசாதீர்கள் . என்னை பொறுத்த வரை, ஐஸ்வர்யா அபிஷேக் இல்லற வாழ்க்கையில் உங்களுக்கு தலையிட உரிமையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒரு நாளைக்கு 100 சிகரெட்… இப்போ திருந்திட்டேன் : ஷாருக் சொன்ன நல்ல விஷயம்!
மயங்கி விழுந்த மாணவிகள்… தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? : பெற்றோர் முற்றுகை!