குடும்பங்களுக்கு இணையச் சேவை : சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 1) 10ஆவது நாளாக நடைபெற்றது. பிற்பகலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

அதில், “சோழிங்கநல்லூர் எல்கோசெஸ் வளாகத்தில் உலகத்தரத்தில் பசுமைப் பூங்கா ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.

எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களைப் பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாகச் சர்வதேச தரத்தில் ரூ.40 கோடியில் மேம்படுத்தப்படும்.

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை உருவாக்கப்படும்.

தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் ரூ.1.72 கோடியில் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் ரூ.11 கோடியில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும்.

100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். இது ரூ.1.20 கோடியில் செயல்படுத்தப்படும்.

20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு 184 கோடி ரூபாயில் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்குக் குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். ரூ.100 கோடி செலவினத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்,

தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கான சீர்மிகு மையம் 10 கோடி ரூபாயில் நிறுவப்படும் என அறிவித்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

பிரியா

சுங்கக் கட்டணம் உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

“காவிரி குண்டாறு திட்டம் நிச்சயமாக நிறைவேறும்”: துரைமுருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share