டிஜிட்டல் திண்ணை: அன்பில் மகேஷை அதிர வைத்த வீடியோ.. வெயிட்டிங்கில் இன்னும் 3 வீடியோக்கள்.. விசாரணையில் கோவை பெண்மணி- பரபர தகவல்!

Published On:

| By Minnambalam Desk

Anbil Mahesh-Digital Thinnai New

வைஃபை ஆன் செய்ததும், ” சண்முகப்பிரியா ராகம் பாடுதே…சந்தனக் காற்றில் உன் நினைவு ஆடுதே… ஆறுமுகா, உன் அருள் தேடி வந்தேனே…”ன்னு லென்த்தியா ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆஃப்.

என்னங்க ப்ரோ.. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எல்லாம் முடிஞ்சும் பக்தி பரவசம் போல..

ஆஹான்.. நான் இன்னும் ‘பூஜா காலிடேஸ்’ வைபில்தான் இருக்கேன் ப்ரோ.. இந்த வைப்ல சோசியல் மீடியாவை திறந்தா ரொம்பவே ‘ஹைப்’ ஆகிடுதுங்க ப்ரோ..

ADVERTISEMENT

ஓஹோ.. ஏதோ வில்லங்க விவகாரத்தை இழுத்துட்டு வந்திருக்கீங்க போல…

வில்லங்கமா இல்லையான்னு நாம எப்படி சொல்றது? திமுக மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளிடம் ‘பார்ட்டி பண்ட்’ வசூலிச்ச கேஸில ‘சம்பவ’ இடத்தை போலீசார் நெருங்கிட்டாங்களாம் ப்ரோ..

அன்பில் மகேஷ், ’பார்ட்டி பண்ட்’ கொடுக்க சொன்ன வில்லங்க வீட்டுக்கு போலீஸ் போய் விசாரிச்சதை பத்தி சொல்லி இருந்தோம் இல்லையா? ஈசிஆரில் உள்ள அந்த வீடு இப்ப பூட்டி கிடக்குது.. போலீஸ் விசாரிச்ச உடனேயே அந்த வீட்டை காலி பண்ண சொல்லிட்டாராம் அன்பில் மகேஷ். இதனால அங்க இருந்த 47 வயது பெண்மணி, சொந்த ஊரான கோவைக்கு போயிட்டாங்களாம்..

ADVERTISEMENT

ஆனாலும் போலீஸ் விடலையே.. ‘பார்ட்டி பண்ட்’ கேஸில் விசாரிக்க சென்னைக்கு வரவழைச்சுருச்சு.. இந்த விசாரணையில என்ன நடந்ததுன்னு போலீஸ் வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “கோயம்புத்தூரில் இருந்து அந்த பெண்மணியை விசாரணைக்கு கூப்பிட்டாங்க.. விசாரணைக்கு வந்த அவங்ககிட்ட ஏகப்பட்ட கேள்விகளை போலீசார் கேட்டுகிட்டே இருந்தாங்க.. அன்பில் மகேஷ் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி.. அந்த பெண்ணின் திருமணம் பற்றி.. நிறைய கேள்விகள்.. ஆனா அந்த பெண்மணி ஒரு கேள்விக்கும் கூட வாயே திறக்காம கண்ணீர் சிந்திகிட்டே இருந்தாங்க..”ன்னு சொல்றாங்க..

அன்பில் மகேஷ் கேஸில அடுத்த அப்டேட் என்ன இருக்குங்க ப்ரோ?

அப்டேட்டா.. அணுகுண்டே வீசிகிட்டு இருக்காங்க.. இந்த கேஸில தலைமறைவாகி ஓடிப் போனாரே அன்பில் மகேஷின் நண்பர் எக்ஸ் எம்.எல்.ஏ. முத்துக்குமார்.. அவரோட ஓட்டுநரா, உதவியாளராக இருந்த சுரேஷ் எடுத்த வீடியோக்கள்தான் இப்ப வைரலாகிட்டு இருக்கு..

ADVERTISEMENT

இந்த சுரேஷ் பத்தி நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம்… போலீஸ் நடத்திய விசாரணையில, “‘பார்ட்டி பண்ட் அப்படின்னு யார்கிட்ட எல்லாம் எந்த இடத்தில வாங்குனது? அந்த ‘பார்ட்டி பண்ட்’ பணத்தை எங்கெல்லாம் அன்பில் மகேஷ் கொண்டு போய் கொடுக்க சொன்னாரு?”ன்னு விலாவாரியாக ஸ்கெட்ச் போட்டு போலீசிடம் சொன்னது சுரேஷ்ன்னு நாம சொல்லி இருந்தோம்.. அந்த சுரேஷ் சொல்லிதான் ஈசிஆர் பெண்மணி வீடு பத்தி போலீசுக்கே தெரியும்னும் அப்ப நாம சொல்லி இருந்தோம்..

இந்த சுரேஷ்தான் இப்ப அன்பில் மகேஸ் கேஸில ஸ்டிராங் எவிடென்ஸ்களை வெச்சிருகிறார்.. அதுல ஒன்னைதான் சோசியல் மீடியாவில கசியவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில இருக்கிற காட்சிகளும் குரலும்..

“இதுல பணம் இருக்கு.. மினிஸ்டர் வீட்டுக்கு போகப்போகுது” என்னு சுரேஷ் பேசுறார்..

அடுத்த ஷாட்

அங்க இருக்கிற “TN01 69660″ காரை காண்பிக்கிறார்

அதுக்கு பிறகு காரில் மஞ்ச கட்டப்பையை வைத்து நியூஸ் பேப்பர் சுற்றப்பட்ட பண்டலை திறந்து கட்டு கட்டாக பணத்தை காண்பித்து, ‘இங்க பாருங்க.. இதெல்லாம் பணம்.. நிறைய பணம்.. இது மினிஸ்டர் வீட்டுக்கு போகப் போகுது.. இப்ப நான் காட்டுறேன்”ன்னு சுரேஷ் பேசுறார்..

அதன் பிறகு காவல் பணியில இருந்த போலீஸ்காரர் ஒரு கவர் கொடுக்கிறார்.. அந்த கவரில், “ பெறுநர் உயர்திரு முத்துக்குமார் அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்- முகாம் அலுலகம், “தென்பெண்ணை இல்லம்” என குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் பின் அன்பில் மகேஷ் பேசுவதை போல ஒரு வீடியோ வருகிறது. அதில் ஆடியோ இல்லை.

அப்போது, “அவங்க வசூல் பண்ண சொல்லிதான் அரசகுமார் வசூல் பண்ணினாங்க..அன்பில் மகேஷ் ப்ரெண்ட் முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரா இருந்தார்.. அதனால முழு ரூபாயும் வசூல் செஞ்சாரு.. (முத்துக்குமாரின் விசிட்டிங் கார்டு காட்டப்படுகிறது)

இந்த பணம் வசூல் செஞ்சு ரெண்டே பேரிடம்தான் கொடுக்கப்பட்டுச்சு..

ஒன்னு முத்துக்குமார், 2-வது அரசகுமார். அரசகுமார் உள்ள இருக்கிறார்.. முத்துக்குமார் எங்க இருக்கிறார்னு தெரியலை.. ஆனாலும் இதுக்கு வழிவகை செஞ்சது யாருன்னு கேட்டீங்கன்னா அன்பில் மகேஷ். அவரு இன்னும் டெய்லி பேட்டி கொடுத்துட்டுதான் இருக்கிறார்.. அவர் மனைவிதான் இந்த முழு பணத்தையும் வாங்குனாங்க.. இதுக்கான ஆதாரம் ஃபுல்லா என்கிட்ட இருக்கு.

அவங்க, ரூ.20 கோடியை முத்துக்குமாருக்கும் ரூ.50 கோடியை அரசகுமாருக்கும் ரூ300 கோடியை அன்பில் மகேஷுக்கும் கொடுத்தது.. மொத்தம் ரூ.420 கோடி வசூல் பண்ணினாங்க.. அதுக்கான ஆதாரம் நான் ரிப்போர்ட்டோட உள்ளே வெச்சிருக்கிறேன்.

இதுல ரூ300 கோடி ரூபாயை ஜனனி மேடத்துகிட்ட (அன்பில் மகேஷ் மனைவி) நான்தான் டெய்லி அப்பப்ப கொண்டு போயிருக்கிறேன்.. கூட இருந்தது சரவணன்.. முத்துக்குமார் ரிலேஷன்.. இதுக்கான ஆதாரம் முழுவதும் இங்க இருக்கு.. (பணம் வசூலிக்கப்பட்ட நபர்கள், பெறப்பட்ட பணம் விவரங்கள் காட்டப்படுகிறது) இப்ப முத்துக்குமார் உயிருக்கே உத்தரவாதம் இல்லை” என சுரேஷ் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

ஏங்க ப்ரோ.. இந்த சுரேஷ் ஏன் அப்பவே வீடியோ எல்லாம் எடுத்து வெச்சிருக்கிறாரே? என்னவாம்?

ஆமாங்க ப்ரோ.. இதை பத்தி நாம விசாரிச்சப்ப, முத்துக்குமாரிடம் உதவியாளராக இருந்த சுரேஷ், அவரது தாயார் ஆபரேஷனுக்காக அன்பில் மகேஷ் மனைவி ஜனனியை நேரில் பார்த்து ரூ.1.5 லட்சம் பணம் உதவியாக கேட்டாராம்..

ஆனால் ஜனனியோ, சுரேஷை அடித்து விரட்டாத குறையாக வீட்டை விட்டு துரட்டிவிட்டாராம்..

ஜனனி அத்துடன் நிற்காமல், முத்துக்குமாருக்கு போனை போட்டு, “அவன் எப்படி எங்கிட்ட வந்து பணம் கேட்பான்”ன்னு எகிற.. இதுல உஷாரான சுரேஷ்.. ‘ஆஹா நம்மை வேலையைவிட்டு தூக்கிடுவாங்க போல.. எதுக்கும் வீடியோக்களை எடுத்து வைப்போம்’ன்னு செஞ்ச வேலைதான் இதான் ப்ரோ..

சரிங்க ப்ரோ.. பேச்சுவாக்குல ‘வீடியோக்கள்’னு சொல்லிட்டீங்க.. அப்ப மத்த வீடியோக்கள் எல்லாம்?

ஆமாங்க ப்ரோ.. சுரேஷ் எடுத்து வெச்சது 4 வீடியோக்களாம்.. அதுல ஒன்னு சாம்பிள்தானாம் இது.. இன்னும் 3 வீடியோக்கள் இருக்கிறதாம்.. அதுல ஒரு வீடியோவில அன்பில் மகேஷ் நேரடியாக, “எவ்வளவு பணம்? யார்கிட்ட இருந்து”ன்னு தெளிவாகவே கேட்கிறதே பதிவாகியும் இருக்கிறதுன்னு சொல்றாங்க ப்ரோ.. இந்த 3 வீடியோக்கள் அடுத்தடுத்து லீக் ஆகி இன்னும் பரபரப்பாகும்னும் சொல்றாங்க ப்ரோ..

இன்னொரு பக்கம் என்ன நடக்குதுன்னா, தங்களுக்கு எதிரான வலை இறுகிகிட்டே போறதால அன்பில் மகேஷ் மனைவி ஜனனி சிஎம் விஜய் தரப்புகிட்ட பேச்சுவார்த்தை நடத்தி பார்த்திருக்கிறாங்க.. ஆனால் சிஎம் விஜய்யோ, “நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதுபடி நடங்க”ன்னு போலீஸ்க்கு ஆர்டர் போட்டுட்டாராம்..

இப்ப அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு மீது எப்ப வேணும்னாலும் தீர்ப்பு வரலாம் அப்படிங்கிறதுதான் நிலைமை.. இந்த நிலைமையில வீடியோ எல்லாம் ரிலீஸ் ஆகுறது அன்பில் மகேஷை அதிர்ச்சி அடைய வெச்சிருக்காம்.. முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் ஆனால் உடனே அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாருன்னும் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share