டிஜிட்டல் திண்ணை: அன்பில் மகேஷ் வழக்கில் ‘வில்லங்க’ விவகாரங்கள்- அப்ரூவர்களின் வாக்குமூலங்கள்- அதிர்ந்த போலீஸ்!

Published On:

| By Minnambalam Desk

Anbil Mahesh-Digital Thinnai

வைஃபை ஆன் செய்ததும், “அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே..”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

இது என்னங்க ப்ரோ.. அன்பானவர்களை பற்றிய நியூஸா ப்ரோ?

அன்பு அளவில்லாததுதான் ப்ரோ.. அன்பு ”எல்லாமும் செய்யும்”தான் ப்ரோ.. இப்ப விஷயத்துக்கு வருவோம்.. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக போன திமுக ஆட்சியில நடந்த ரூ.100 கோடி மோசடி பத்தி கேஸ் நடந்துகிட்டு இருக்குது இல்லையா?

ADVERTISEMENT

இந்த கேஸில, மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் மேல போட்டிருக்கிற எஃப்ஐஆரை ரத்து செய்யனும்னு ஹைகோர்ட்ல போட்ட மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்துச்சு.. அப்ப நீதிபதி லட்சுமி நாராயணன், ”ஆளுநரின் அதிகாரம் குறித்தெல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆளுநர் பதவி என்பது ஆட்டு தாடியை போல தேவையற்றது என்று தானே திமுக கூறும். திமுக-வை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாதது தானே”ன்னு கேட்டிருந்தது விவாதமாகி இருக்கிறது.

இந்த கேஸில வேற என்ன நடந்துகிட்டு இருக்குன்னு நாம விசாரிச்சப்ப ஷாக் தகவல்கள் கிடைச்சதுங்க ப்ரோ.. அதாவது, இந்த கேஸில முதலில் சிக்கியது பிடி அரசகுமார். அடுத்ததா அவரோட கூட்டாளி மாஜி தேமுதிக எம்.எல்.ஏ. முத்துக்குமார். இவங்கதான் கேஸில் A1, A2.

ADVERTISEMENT

பிடி அரசகுமார் போன ஜூன் மாசமே கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டாஸும் போடப்பட்டு இப்ப ரத்தாகிடுச்சு.. மாஜி எம்.எல்.ஏ. முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறார்.. அவர் மும்பையில் இருக்கிறதா போலீசுக்கும் தகவல் கிடைச்சுருக்குன்னு நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம்.

பிடி அரசகுமார், ஏற்கனவே அப்ரூவராக மாறி, அன்பில் மகேஷ் தொடர்பான பல விவகாரங்களையும் போலீசிடம் சொல்லி இருந்தார். இதுக்கு அப்புறமா தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாரின் உதவியாளர் சுரேஷையும் போலீஸ் தூக்கி விசாரிச்சது.

ADVERTISEMENT

இந்த சுரேஷிடம் வாங்குன வாக்குமூலங்களும் அதுக்கு அப்புறம் நடந்த ‘சம்பவங்களும்’தான் ரொம்பவே அதிரவைக்குதாம்.. இதை பத்தி நாம போலீஸ் வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “முத்துக்குமார் உதவியாளர் சுரேஷிடம் விசாரணையை நாங்க தொடங்கும் போது.. அத்தனை விவரங்களையும் கொட்டிட்டாரு.. ”பார்ட்டி பண்ட்” அப்படிங்கிற பேரில யார் யாரிடம் பணம் வாங்கப்பட்டது? எந்த இடத்தில் வாங்குனது? அந்த ”பார்ட்டி பணம்” எந்த ‘பார்ட்டி’களுக்கு போனதுன்னு விலாவாரியாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாதிரி வாக்குமூலமா தந்தார் சுரேஷ்.

இந்த வாக்குமூலங்களை வெச்சுகிட்டு சுரேஷ் சொன்ன ஒவ்வொரு ”பார்ட்டி”வீட்டுக்கும் நாங்க போனோம்.. அப்ப, “இதுதான் அன்பில் மகேஷ் வீடு”ன்னு ஒரு வீட்டை சுரேஷ் காண்பிச்சார்.. நாங்க.. “ஏம்பா.. இது அன்பில் மகேஷ் வீடு இல்லையே.. அது வேற இடத்துலதானே இருக்குது”ன்னு சொன்னோம்..

ஆனா அந்த சுரேஷ், “இல்லைங்க சார்.. இதுவும்தான் அன்பில் மகேஷ் வீடுதான்”ன்னு திட்டவட்டமாக சொன்னார்.. இது என்ன புது குழப்பமா இருக்கேன்னு நாங்க அந்த வீட்டுக்கு உள்ளே போய் விசாரிச்சோம்..

அந்த வீட்டில இருந்தது 54 வயது டீச்சர்.. அவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ஆமாங்க சார்.. இது அன்பில் மகேஷ் வீடுதான்..அவர்தான் வாங்கி இருக்காரு”ன்னு உறுதியாக சொன்னார்..

அந்த டீச்சரிடம் தொடர்ந்து விசாரிச்சப்ப, அன்பில் மகேஷ் குறித்து பல தகவல்களை சொன்னதுடன் அதுக்கு ஆதாரமா போட்டோக்களையும் காட்டி விளக்கம் சொல்ல சொல்ல எங்களுக்கே ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு..

இது என்னய்யா புது விவகாரமா இருக்கேன்னு நாங்க அங்க இருந்தே, ‘மேலிட’த்துக்கு தகவல் சொன்னோம்..

அவங்களும் ‘ஷாக்’ ஆகி, “அப்படின்னா மொத்த டீட்டெய்லும் கலெக்ட் பண்ணிட்டு வாங்க”ன்னு சொன்னாங்க.. ”ன்னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ.

’பார்ட்டி பண்ட்’ விவகாரத்துல விசாரிக்க போய் அன்பில் மகேஷ் பத்தின வேற வில்லங்க விவகாரங்கள் கிடைச்சதுதான் இப்போதைக்கு போலீஸ் விசாரணை வட்டாரங்களில் ஹாட் டாபிக்.. வரும் நாட்களில் எல்லாருக்குமே இது ‘பேசுபொருள்’ஆகலாம்னு போலீஸ் வட்டாரங்களில் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share