“காவிரி குண்டாறு திட்டம் நிச்சயமாக நிறைவேறும்”: துரைமுருகன்

அரசியல்

திமுக ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்,

காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,

“இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு வந்ததை போலவும், வேறு யாரும் அதனை பற்றி சிந்திக்காது போன்றும் விஜயபாஸ்கர் பேசுகிறார்.

காவிரி குண்டாறு திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தான் முதன்முதலாக கொண்டு வந்தார்.

ரூ.165 கோடி மதிப்பில் அதற்காக கதவணை கட்ட நிதி ஒதுக்கியது கலைஞர் தான். அந்த கதவணையை கட்டியது நான் தான். அதிமுக ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் 64 சதவிகிதம் கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றுள்ளது. இதற்காக ரூ.111.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்வாய் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயமாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஆருத்ரா கோல்டு மோசடி: விசாரணை வளையத்தில் ஆர்.கே.சுரேஷ்

8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.