மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்? ULFA, NSCN குற்றச்சாட்டு!

By Mathi

|

Published on 15 Jul 2025, 7:55 AM

Myanmar Border Attack

மியான்மர் நாட்டின் எல்லையில் தங்களது முகாம்கள் மீது இந்திய ராணுவம் டிரோன்கள் மூலமாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக வடகிழக்கு ஆயுத குழுக்களான உல்ஃபா (ULFA), நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN) ஆகியவை குற்றம் சாட்டி உள்ளன. Army Surgical Strike Myanmar

வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் தனிநாடு, நாகாலாந்து தனிநாடு கோரும் ஆயுதக் குழுக்கள்தான் ULFA, NSCN. இந்த இயக்கங்கள் பல்வேறு பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றன.

ADVERTISEMENT

இந்தியா- மியான்மர் எல்லையில் சீனாவின் ஆதரவுடன் தங்களது முகாம்களை இந்த ஆயுதக் குழுக்கள் அமைத்துள்ளன. ஏற்கனவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திய போது மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லியத் தாக்குதல் நடத்தி அதிரவைத்தது.

இந்த நிலையில், உல்பா மற்றும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் ஆகிய இயக்கங்கள் அடுத்தடுத்து, மியான்மர் எல்லையில் தங்களது முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா டிரோன்கள் மூலம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளன. அதே நேரத்தில் ராணுந்த் தரப்பில் இத்தகைய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT

மேலும் இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலில் உல்பா இயக்கத்தின் முதன்மை தளபதி நயாம் ஆக்சோம் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் மிசோரம் முதல்வர்

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில் மியான்மர் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் முதல்வர் லால்துஹோமா Lalduhoma, டெல்லியில் ஜூலை 14-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியது கவனம் பெற்றுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel