விவசாயிகள் போராட்டத்துக்கு பாமக ஆதரவு

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் உடைமைகள்மீதான ஜப்தி நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வருகிற 5ம் தேதி மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை உழவர்களை உலகுக்குச் சோறு படைக்கும் கடவுள்களாகப் பார்க்கிறது. உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்திருக்கிறது. அந்தவகையில், வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel