திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 41 சீட்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தொகுதிப்பங்கீடு குறித்து 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இன்று காலை 9.15 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்திற்கு முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கோபண்ணா ஆகியோருடன் வருகை தந்தார். காலை சிற்றுண்டிக்குப் பிறகு உற்சாகத்துடன் தொடங்கிய இந்த தொகுதிப்பங்கீட்டில் திமுக சார்பில் க.அன்பழகன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். இதில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி இழுபறி என்று கூறப்பட்டு வந்த நிலையில், 15 நிமிடத்திற்குள் தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து நமது மின்னம்பலம்.காமின் கட்டுரை பகுதியில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்

https://minnambalam.com/k/1459728020

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel