பெண்கள் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முகத்தில் அரும்பும் பூனை முடிகளை நீக்க சில எளிமையான மற்றும் இயற்கையான சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.
முகத்தில் உள்ள முடியை நீக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ்பேக் உதவியாக இருக்கும். முதலில் பப்பாளியை மசித்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வர சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம்.
அதேபோன்று கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக் கூட முகத்தில் உள்ள முடி பிரச்சினையை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு, சந்தனம் சேர்த்து ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவில் சோள மாவு கலந்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பர்கர்!
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
காசியில் பிரியங்கா நின்றிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்