குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பர்கரை கடைகளில் வாங்கி தராமல் வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும். இதை மதிய உணவாக லஞ்ச் பாக்ஸிலும் வைத்து அனுப்பலாம்.
என்ன தேவை?
பர்கர் பன் – 4
உருளைக் கிழங்கு – 2
கேரட் துருவல் – கால் கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
பாதாம், முந்திரி, வேர்க் கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு, வெண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக் கவும். பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை இவற்றை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வெங்காயம், கேரட் துருவல், மசித்த உருளை ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வாணலியில் லேசாக வதக்கிக் கொள்ளவும். பன்னை பாதியாக வெட்டி அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி, காய்கறிக் கலவையில் கொஞ்சம் எடுத்து அதன் மேல் நன்கு பரத்தவும். இதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த நட்ஸ் மற்றும் கொஞ்சம் மல்லித் தழை தூவி அதன்மேல் வெட்டி வைத்த பாதி பன்னால் மூடி அதை நான்காக வெட்டி லஞ்ச் பாக்ஸில் வைக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
காசியில் பிரியங்கா நின்றிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்