காவிரி டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Mathi

Heavy rain

காவிரி டெல்டா (Cauvery Delta) மாவட்டங்களில் இன்று கனமழை (Heavy Rain) பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வடதமிழக கடலோரப் பகுதிகளின் வளிமண்டல சுழற்சியால்

ADVERTISEMENT
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • மயிலாடுதுறை

ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • புதுக்கோட்டை
  • கடலூர்
  • விழுப்புரம்
  • திருவண்ணாமலை
  • பெரம்பலூர்
  • அரியலூர்
  • கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share