நம்முடைய புற அழகை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்தை சிறப்பாக்க வைட்டமின் டி முக்கியத் தேவையாக உள்ளது.
ஆனால், வீட்டுக்குள்ளேயே இருப்பது, அலுவலகம் சென்றாலும் ஏ,சி அறையிலேயே இருப்பது போன்றவற்றால் சூரிய ஒளி நம் உடம்பில் படுவதே அரிதாகிவிட்டது. அதையும் மீறி வெயிலில் சென்றாலும் உடல் முழுவதும் மறைக்கும்படி ஆடை அணியும்போது வெயில்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
இந்த நிலையில் மேனி அழகை மிளிர செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி நம் தோலுக்கு, எலும்புக்கு வலு சேர்க்கும் நிலையில் சன் ஸ்க்ரீன் க்ரீம் என்ற பெயரில் விற்கும் க்ரீம்களை பூசுவதால், வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுவதோடு தோலின் நிறமும், எலும்பின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
எனவே, முடிந்தவரை, காலை வெயில் மற்றும் மாலை வெயில் உங்கள் உடலில் படும்படி கொஞ்சம் நேரம் நில்லுங்கள்.
காலையில் 9 மணிக்குள்ளும் மாலையில் 4 – 5 மணி வரையிலான நேரத்திலும் வெயிலில் உங்கள் உடல்படும்போது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
உங்கள் எலும்பு ஆரோக்கியமும் சரும ஆரோக்கியமும் மேம்படும். வெயிலில் நிற்பது என்பது, உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கச் செய்யும், வரும் முன் காக்கும் செயல்பாடு… அழகை அதிகரிக்கும் அஸ்திவாரம்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை சாதம்!
எஸ்.பி.பி பெயரில் சாலை : ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா
