கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: அமேசானின் புதிய முயற்சி!

இந்தியா

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின்  ஒன்பதாவது பதிப்பு நாளை (செப்டம்பர் 27) தொடங்க உள்ள நிலையில், ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமேசான் இந்தியாவின் இயக்குநரான அமித் நந்தா, “பண்டிகைக் காலத்தை அனைவருக்கும் மறக்கமுடியாததாக மாற்றுவதும், டிஜிட்டல் மாற்றம் மூலம் பல்வேறு பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுடன் இணைவதும் அதிகாரம் அளிப்பதும் எங்கள் குறிக்கோளாகும்.

16 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன், கோடிக்கணக்கான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், இந்தியா முழுவதும் சேவை செய்யக்கூடிய குறியீடுகளுக்கு நம்பகமான விநியோகத்தை எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஒன்பதாவது பதிப்பு வரும் நாளை (செப்டம்பர் 27) தொடங்க உள்ளது.

விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை எளிதாக பட்டியலிடவும், திறம்பட காட்சிப்படுத்த உதவும் வகையில் விற்பனை நிகழ்வை திட்டமிடவும், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தயாரிப்புகளின் பட்டியலை தனது இ-காமர்ஸ் தளத்தில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில்  9,500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு

சவுக்கு சங்கர் மீதான 2ஆவது குண்டர் சட்டம் ரத்து!

பாலியல் வன்கொடுமை: ஆறு வயது சிறுமியைக் கொன்ற பள்ளியின் முதல்வர்!

பியூட்டி டிப்ஸ்: தலைக்கு மருதாணி இலைகளை அரைத்து அப்படியே தடவிக்கொள்ளாதீர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *