சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயர் வைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா இன்று (செப்டம்பர் 26) நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறுதி காலம் வரை வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று அவரது நினைவு நாளான நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து தனது கோரிக்கையை 36 மணி நேரத்தில் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளாரும், மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நண்பருமான இளையராஜாவும் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி : சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி!
471 நாட்களுக்கு பிறகு… ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி