தமிழக சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு

Published On:

| By Mathi

Tamil Nadu Assembly RN Ravi

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று ஜனவரி 20-ந் தேதி வெளிநடப்பு செய்துள்ளார்.

  • 2021-ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார்.
  • 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமது உரையை ஆளுநர் ரவி முழுமையாக வாசித்தார்.
  • 2023-ல் ஆளுநர் உரையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கலைஞர் பெயர்களை உச்சரிக்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, ஆளுநர் வாசிக்காத வார்த்தைகள் சபைக்குறிப்பில் இடம் பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க. சட்டப்பேரவையில் இருந்து முதல் முறையாக ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.
  • 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடவில்லை என கூறி 2-வது ஆண்டாக வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
  • 2025-ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்திலும் தேசிய கீதத்தை முதலிலேயே இசைக்கவில்லை என குற்றம்சாட்டி 3-வது ஆண்டாக வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
  • தற்போது 4-வது ஆண்டாக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வெளிநடப்பு செய்துள்ளார். இந்த ஆண்டும் தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share