’பரிதாபங்கள் – லட்டு வீடியோ’ மீண்டும் பதிவேற்ற வேண்டும்! – தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கோரிக்கை!

Published On:

| By Minnambalam Login1

யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகருக்கு பாஜக ஆதரவாளர்கள் விடுத்த அச்சுறுத்தல்களைக் கண்டித்து தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் சங்கம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் திருப்பதி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ‘பரிதாபங்கள்’ என்ற பிரபலமான யூடியூப் சேனலை நடத்திவரும் கோபி மற்றும் சுதாகர், திருப்பதி லட்டு பிரசாத சர்ச்சையை மையமாக வைத்து ஒரு நகைச்சுவை காணொளியை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.

ஆனால் தமிழக பாஜகவைச் சேர்ந்த சிலர் கோபி மற்றும் சுதாகரை மிரட்டி, அந்த காணொளியை நீக்கச் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கோபி, சுதாகருக்கு எதிராக செயல்பட்ட பாஜகவினரை கண்டித்து தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

லட்டு பாவங்கள் வீடியோவை டெலிட் செய்த பரிதாபங்கள் சேனல்.. வருத்தம் தெரிவித்து பரபரப்பு விளக்கம் | Parithapangal's YouTube page has deleted the video of Laddu Paavangal ...

ADVERTISEMENT

பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர்!

அதில் “திருப்பதி லட்டு குறித்து தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, அக்கருத்தை வெளியிட்டவர்களை சிலர் மிரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவுக்கு தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதை வெளியிட்ட கோபி -சுதாகரை மிரட்டி, அந்த வீடியோவையே நீக்கச் செய்துள்ளனர்.

நகைச்சுவை மூலமாக நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கலை வடிவம், நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானது. இந்த கலை வடிவத்தை பின்பற்றும் கோபி – சுதாகர், மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.

ஆனால், இந்தக் கலைவடிவம் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணியை மறுதலிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமையை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும், கோபி – சுதாகருக்கு எதிராக மிரட்டல் விடுத்து வரும் பாஜகவை சேர்ந்த தலைவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதேபோல், குணால் கம்ரா, முனாவர் ஃபரூக்கி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதுடன் அவர்கள் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

பரிதாபங்கள்' லட்டு வீடியோ மீண்டும் பதிவேற்ற வேண்டும்: டிஜிட்டல் படைப்பாளிகள் - தமிழ் News - IndiaGlitz.com

கோபி – சுதாகர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

கோபி சுதாகர் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் தொழிலை முடக்கும் வகையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆகவே, கோபி – சுதாகர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது எனவே கருத்துரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட திருப்பதி லட்டு குறித்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழ்கேள்வி செந்தில் வேல், அரண்செய் அசீப், நக்கலைட்ஸ் பிரசன்னா, செகண்ட் ஷோ ரஹ்மான் போன்ற பிரபல யூடியூபர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

காந்தி 156வது பிறந்தநாள் : ஆளுநர் ரவி, முதலைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

”விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் தாங்க முடியவில்லை”: இயக்குநர் தமிழரசன் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share