சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்த தினம் காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு காலை முதல் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி புதிய முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மேயர் பிரியா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
”விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் தாங்க முடியவில்லை”: இயக்குநர் தமிழரசன் உருக்கம்!