சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 05) சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்த நிலையில் இன்று ரூ.480 அதிகரித்துள்ளது.
அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 38,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.480 உயர்ந்து 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39,000 ஐ நெருங்குகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சரவனுக்கு மொத்தமாக 1,040 ரூபாய் அதிகரித்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது . ஒரு கிராம் வெள்ளி 4.20 காசுகள் அதிகரித்து ரூ.66.70க்கும், கிலோவுக்கு 4.200 ரூபாய் உயர்ந்து, 66,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா