சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து இருக்கிறது. Gold price in Chennai
தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சவரனுக்கு ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 4,775 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.560 அதிகரித்து ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளி 66.70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாக்கும் விற்பனையாகிறது.
கலை.ரா
பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த வாகனங்கள்!
பிரபுதேவா இயக்கத்தில் மஞ்சுவாரியார் : வைரலாகும் ‘கண்ணிலு கண்ணிலு’!