தெருவில் நடந்த கிரிக்கெட் விளையாட்டை சமஸ்கிருதத்தில் ஒருவர் வர்ணனை செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பகிர்ந்த பிரதமர் மோடி சமஸ்கிருத வர்ணனையாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது தேசிய விளையாட்டை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கிரிக்கெட் விளையாடப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை முன்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வர்ணனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது செல்போனிலேயே லைவ் ஸ்டீரிமீங் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி வந்துவிட்ட காரணத்தினால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என்று பல்வேறு மொழிகளில் வர்ணனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிறுவர்கள் விளையாடிய கிரிக்கெட்டை ஒருவர் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்கிறார்.
விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு பெண்களிடம் கூட அவர் சமஸ்கிருதத்தில் உரையாற்றுகிறார். அதற்கு ஒரு பெண் அந்த மொழியிலேயே பதிலளிக்கிறார்.
பலரின் கவனத்தையும் ஈர்த்த இந்த வீடியோ சமூகவலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் அதனை குறிப்பிட்டு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது பார்ப்பதற்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு நான் பேசிய மன்கிபாத் நிகழ்ச்சி ஒன்றில் காசியில் இதேபோன்று நடைபெற்ற சமஸ்கிருத வர்ணனையை பகிர்ந்துகொண்டேன்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1577232565429497856?s=20&t=iim96qSMi-4ylnIXGLilPQ
அத்துடன் அவர் கடந்த ஆண்டு மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவின் இணைப்பையும் அதில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பலரும் அந்த வர்ணனையாளரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
செம்மொழி பட்டியலில் இருக்கும் சமஸ்கிருதம், இந்தியாவில் மிக குறைந்த மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. இதனையடுத்து மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சமஸ்கிருதத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை?: அதிர்ச்சி தகவல்!
பட்டு போன மரத்துக்கு எதற்கு தண்ணீர், பிரயோஜனம் இல்லா மொழிக்கு இவ்வளவு கோடி பணம் செலவு செய்தும் ஒன்றும் ஆக போறதில்ல. இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தும் ரேடியோவில் தானே பேசுகிறார்!!!!