காலையில் வீழ்ச்சி… மாலையில் எழுச்சி… பதுங்கி பாய்ந்த தங்கம் விலை!

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Oct 2025, 3:46 PM

gold and silver-price today evening 10 October 2025

காலையில் தங்கம் விலை குறைந்தபிற்பகலில் அதிரடியாக ரூ.640 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது 90,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.11,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று (அக்டோபர் 10) காலை சவரனுக்கு ரூ.1,320 விலை குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.640 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.90,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.184 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
9-10-202591,400 
8-10-202591,080
7- 10-202589,600
6-10-202589,000
5-10-202587,600
4-10-202587,600
3-10-202587,200
2-10-202587,600
1-10-202587,600

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel