சென்னையில் இன்று (ஏப்ரல் 30) ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. தமிழகத்திலும் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை காலையில் ஒரு சவரன் ரூ.1,200 மற்றும் மாலையில் ரூ.400 குறைந்தது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.13,900க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. சவரன் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் விலையிலும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.11,575க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 29-4-2026 | 1,11,200 |
| 28-4-2026 | 1,12,800 |
| 27-4-2026 | 1,13,840 |
| 26-4-2026 | 1,13,600 |
| 25-4-2026 | 1,13,600 |
| 24-4-2026 | 1,12,800 |
| 23-4-2026 | 1,13,280 |
| 22-4-2026 | 1,14,000 |
| 21-4-2026 | 1,14,400 |
| 20-4-2026 | 1,14,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 29-4-2026 | 260 |
| 28-4-2026 | 265 |
| 27-4-2026 | 270 |
| 26-4-2026 | 270 |
| 25-4-2026 | 270 |
| 24-4-2026 | 265 |
| 23-4-2026 | 270 |
| 22-4-2026 | 275 |
| 21-4-2026 | 275 |
| 20-4-2026 | 280 |









