ஆட்டம் காட்டும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 26 Nov 2026, 10:07 AM

gold

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று (நவம்பர் 26) மீண்டும் ரூ.960 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் 6 தேதி முதல் தொடர்ச்சியாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் சவரனுக்கு ரூ.15,000 வரை குறைந்தது. இதையடுத்து நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை லேசாக உயர்ந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மீண்டும் ரூ.2360 வரை குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ரூ.960 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.11,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.92,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.9,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

14 கேரட் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.7,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

25-11-202691,360 
24-11-202693,720
23-11 -202692,800
22-11 -202691,720
21-11 -202691,720
20-11 -202692,080
19-11 -202695,840
18-11 -202697,720
17-11 -202699,760
16-11-20261,00,320

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

25-11-2026165
24-11-2026175
23-11-2026175
22-11-2026175
21-11 -2026175
20-11 -2026175
19-11 -2026180
18-11 -2026185
17-11 -2026190
16-11 -2026190

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel