தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.









