’ஜெம்’ வீரமணி வீட்டு வாட்ச்மேன் கைது ஏன்? சென்னை போலீஸ் ’ஷாக்’ தகவல்!

By Mathi

|

Published on 3 Nov 2026, 1:16 AM

சிறுமிகளை சீரழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ‘ஜெம்’ வீரமணியின் வீட்டு காவலாளி சீனிவாசன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்டு வழக்குகளில் கைதாகியுள்ள Gem Granite வீரமணிக்கு இருபது வருடங்களுக்கு மேலாக உதவிய Watchman ஆக வேலை பார்த்து வந்த சீனிவாசன் என்பவர் இரண்டு வழக்குகளில் கைது.

ADVERTISEMENT

மேற்கண்ட வாட்ச்மேன் சீனிவாசன் என்பவர் ஜெம் கிரானைட் வீரமணி, சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக மேற்படி சிறுமிகளை தனது வாட்ச்மேன் உதவியுடன் அவரது அறையில் உட்கார வைத்து, பின்பு வீரமணி அழைக்கும்போது சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளார். CCTV கேமராவின் கோணத்தை (Angle) வேறு பக்கமாக திருப்பியும் மற்றும் மின் இணைப்பை துண்டித்தும், சிறுமிகள் அறையை விட்டு செல்லும் போதும் வெளியே வரும்போதும் அவர்கள் வீட்டிற்கு வருவது CCTV கேமராவில் பதிவாகாதவண்ணம் சதி செய்துள்ளார்.

மேலும், இவ்வழக்குகள் தொடர்பாக எதிரி ஜெம் வீரமணிக்கு உதவிய சீனிவாசனின் எண்ணூரில் உள்ள வீட்டை சோதனை செய்தும், பின்பு வாட்ச்மேன் சீனிவாசனின் செல்போன் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்படி எதிரி சீனிவாசன் என்பவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் (Remand) வைக்க 01.11.2026 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி சீனிவாசன் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel