விஜய் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களின் இலாக்காக்கள் குறித்த முழு விவரம்! கவனம் ஈர்த்த செங்கோட்டையன் துறை மாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை முனைவர் மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி அமைப்பது மற்றும் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் பொறுப்புகள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டை லோக் பவன் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மாற்றப்பட்ட இலாக்கா விவரங்கள்:

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), இந்திய வன சேவை (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட தனது முந்தைய பொறுப்புகளுடன், தற்போது கூடுதலாக சிறப்பு முயற்சிகள் மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன்தீர்ப்பு ஆகிய துறைகளையும் கவனிப்பார்.
அதே நேரத்தில், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் முதலமைச்சரிடமிருந்து மாற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அமைச்சர் என். ஆனந்த்:

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகிய துறைகளுடன் கூடுதலாக பாசனம் மற்றும் சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள் ஆகியவற்றையும் கவனிப்பார். மேலும், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன்தீர்ப்பு துறை இவரிடமிருந்து மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர். நிர்மல்குமார்:

மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகிய துறைகளைத் தொடர்ந்து கவனிப்பார். இவரிடம் இருந்த சட்டமன்றத் துறை மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கே.ஏ. செங்கோட்டையன்:

இதுவரை நிதி அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் சட்டமன்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கான பொறுப்பு

  • மீன்வளத்துறை – தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீ நாத்
  • வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
  • பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
  • கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி
  • வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்
  • சுற்றுச்சூழல்துறை – திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்
  • வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்
  • கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்
  • சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா
  • சமூகநலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி
  • சுற்றுலாத்துறை – கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்
  • கைத்தறி, ஜவுளித்துறை – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி
  • வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை – ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
  • போக்குவரத்து துறை – சேலம் தெற்கு எம்எல்ஏ விஜய் தமிழன் பிரபாகரன்
  • இந்து சமய அற நிலையத்துறை – ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ்
  • உயர் கல்வித்துறை – மேலூர் தொகுதி எம்எல்ஏ பி.விஸ்வநாதன்
  • ஏ.ஐ., தகவல் தொழில்நுட்பத்துறை – வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்
  • வெளிநாடுவாழ் தமிழர் நலன் – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்
  • தொழிலாளர் நலத்துறை – அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்
  • மனிதவளத்துறை – தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்
  • நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை – ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன்
  • மதுவிலக்கு மற்றும் கலால் துறை – கிணத்துக்கடவு எம்எல்ஏ கே.விக்னேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share