+2 முடிச்சதும் ‘மாஸ்’ ஐடி வேலை! பிரெஷ்வொர்க்ஸ் கொடுக்கும் மெகா ‘ஜாக்பாட்’

By Santhosh Raj Saravanan

|

Published on 2 May 2026, 4:01 PM

freshworks fssa 2026 free it training stipend plus two students details

நம்ம ஊரு ஐடி ஜாம்பவான் ‘பிரெஷ்வொர்க்ஸ்’ (Freshworks) ஒரு செம்ம வாய்ப்பை அறிவிச்சுருக்கு.  விட்டுருக்கு. பீஸும் இல்ல, மாசம் 10,000 ரூபாய் தர்றாங்க. ஒரு வருஷம் கழிச்சு அதே கம்பெனியில வேலையும் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ‘மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்’, இதோ அந்த அதிரடி விவரம்!”

உலக அளவில் கலக்கி வரும் சென்னையைச் சேர்ந்த ‘பிரெஷ்வொர்க்ஸ்’ நிறுவனம், தனது ‘பிரெஷ்வொர்க்ஸ் சாப்ட்வேர் அகாடமி’ (FSSA) 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையைத் தற்போது தொடங்கியுள்ளது. “வசதி இல்லாத ஆனா திறமையான நம்ம ஊரு பிள்ளைகளைத் தேடித்தேடி எடுக்குறாங்க பாஸ்!”

ADVERTISEMENT
யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்?

கல்வித்தகுதி: நீங்கள் 2025 அல்லது 2026ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு (+2) முடித்திருக்க வேண்டும்.

மதிப்பெண்: 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஒரு வருடம் முழுமையாக சாப்ட்வேர் டெவலப்மெண்ட் (Software Development), யூஐ/யூஎக்ஸ் (UI/UX) மற்றும் ப்ராடக்ட் டிசைன் (Product Design) போன்ற லேட்டஸ்ட் டெக்னாலஜிகளைப் பற்றிக் கற்றுத் தருவாங்க.

பயிற்சி காலத்திலேயே உங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இது உங்க செலவுக்கு ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்கும். படிக்கிறதுக்கு ஒரு புது லேப்டாப் (Laptop) இலவசமா கொடுத்துடுவாங்க. படிச்சு முடிச்சதும் உங்க பெர்ஃபார்மென்ஸ் நல்லா இருந்தா, பிரெஷ்வொர்க்ஸ் கம்பெனியிலயே வேலையும் கன்பார்ம் பாஸ்!

ADVERTISEMENT
முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 12, 2026.

பயிற்சி தொடக்கம்: ஆகஸ்ட் 2026.

பயிற்சி நடக்கும் இடம்: பிரெஷ்வொர்க்ஸ் அலுவலகம், பெருங்குடி, சென்னை.

மே 12 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க பாஸ். அப்ளிகேஷன் அதிகமா வந்தா சீக்கிரம் விண்டோ க்ளோஸ் ஆக வாய்ப்பு இருக்கு. ‘Miss pannidatheenga பாஸ்!’, இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க.

 உங்களுடைய 10, 12ஆவது மார்க் ஷீட் மற்றும் வருமானச் சான்றிதழை (Income Certificate) தெளிவா ஸ்கேன் பண்ணி வச்சுக்கோங்க. ‘அப்ளை’ பண்ணும்போது இதுதான் உங்களுக்கான ‘கோல்டன் டிக்கெட்’. இதுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. யாராவது காசு கேட்டா குடுக்காதீங்க பாஸ். இது ஒரு முழுமையான இலவசச் சேவை.

விருப்பமும் தகுதியும் உள்ள தம்பி, தங்கச்சிகள் பிரெஷ்வொர்க்ஸ் அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.freshworks.com/fssa வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு சாதாரணப் பையனோ, பொண்ணோ உலகத்தரம் வாய்ந்த ஒரு ஐடி கம்பெனியில நுழைய இது ஒரு சூப்பர் ஷார்ட்கட். டிகிரி படிக்க வசதி இல்லைன்னு சோர்ந்து போய் உட்காராம, இந்த ‘ஜாக்க்பாட்டை’ தட்டித் தூக்குங்க.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel