திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

Published On:

| By Pandeeswari Gurusamy

27 people including minister sivasankar acquitted

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.எஸ்.சிவசங்கர். இவரிடம் வேலை வாங்கித் தருமாறு, ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அணுகியதாகக் கூறப்படுகிறது. அப்போது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணி பெற்றுத் தருவதற்காக 23 லட்சம் ரூபாய் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளராகச் செயல்பட்ட இளஞ்செழியன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து பணமோசடி விவசாகரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிவசங்கருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share