சண்டே ஸ்பெஷல்: சாப்பிடும் உணவு, தொண்டைக் குழியிலேயே நிற்கிறதா… தீர்வு என்ன?

Published On:

| By Kavi

Food stuck in the throat Causes and treatment

சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் சிலர் உணர்வார்கள். இது இரண்டு, மூன்று நாட்கள் தொடரும்… இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா? Food stuck in the throat

“இதை Gastroesophageal Reflux Disease (GERD) என்ற பிரச்சினை என்று சொல்வார்கள். அதாவது உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது நெகிழ்ந்திருப்பதால், சாப்பிடுகிற உணவானது மேல்நோக்கி எதுக்களித்துக்கொண்டு வரும்.

ADVERTISEMENT

இந்தப் பிரச்சினையின் காரணமாக சிலருக்கு உணவை விழுங்கும்போது அசௌகர்யம் ஏற்படலாம். உணவை விழுங்கும்போது இப்படிப்பட்ட உணர்வு தொடர்ந்தால் அவர்கள் வயிறு, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எண்டோஸ்கோப்பி எனப்படுகிற சோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

இந்த சோதனையின் மூலம் உணவுக்குழாயில் ஏதேனும் அடைப்போ, பிரச்னையோ இருக்கிறதா, உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகும் வால்வு எப்படியிருக்கிறது, அது சரியாகத் திறந்து கொள்கிறதா,

ADVERTISEMENT

அந்த இடத்தில் அமிலம் எதுக்களிப்பது நடக்கிறதா, இரைப்பையில் ஏதும் புண்கள் இருக்கின்றனவா, கட்டி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

இரைப்பையில் ஹெச் பைலோரி (H Pylori) ) என்ற தொற்று இருக்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்து பார்த்து அதன் விளைவாக பிரச்சினை இருக்கிறதா என்றும் பார்க்கலாம். எனவே முதலில் எண்டோஸ்கோப்பி டெஸ்ட் செய்து பார்க்கவும்.

ADVERTISEMENT

அடுத்து, உணவுக்குழாயின் தசைகள் எந்த அளவுக்கு வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஈஸோபீஜியல் மானோமெட்ரி’ (Esophageal Manometry) என்ற டெஸ்ட்டையும் செய்து பார்க்கலாம்.

அதாவது உணவுக்குழாயில் அடைப்பு இல்லாத நிலையிலும் சாப்பிடும் உணவானது உள்ளே இறங்குவதில் பிரச்சினையை ஏற்படுத்தும் அளவுக்கு உணவுக்குழாய் தசைகள் காரணமாக இருக்கலாம். ‘அக்கலேஷியா’ ( Achalasia) என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு வரலாம். அந்தப் பிரச்சினையை இந்த டெஸ்ட்டில் கண்டுபிடிக்கலாம்.

40 ப்ளஸ் வயதில் இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால் இந்த டெஸ்ட்டின் மூலம் அக்கலேஷியா பாதிப்பு இருக்கிறதா என்பதை கட்டாயம் தெரிந்துகொள்வது நல்லது. தேவைப்பட்டால் நெஞ்சுப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதிக்கான சிடி ஸ்கேனும் செய்து பார்க்கலாம்” என்கிறார்கள் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர்கள். Food stuck in the throat Causes and treatment

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அப்டேட் குமாரு

மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share