தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும்பாலும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைத்து தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.
அதன்பிறகு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை.
இந்த சூழலில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஆளுநருக்கு ஸ்டாலின் விரித்த வலை… வந்து விழுந்த எடப்பாடி