5 நாள் வங்கி பணி: உயர்நிலைக் குழு அமைப்பு… இன்று கூடுகிறது!

Published On:

| By Mathi

Bank Strike- UFBU

5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படுவது தொடர்பாக முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று (செப்டம்பர் 30) நடைபெறுகிறது.

5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU முடிவு செய்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் (IBA), UFBU-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்று நாள் வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது, 5 நாள் வங்கிப் பணியை அமல்படுத்துவது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக UFBU அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தக் குழுவின் தலைவராக பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரஜ்னீஷ் கர்நாடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அசோக் சந்திரா மாற்றுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் வங்கியின் பினோத் குமார், ஐடிபிஐ வங்கியின் ராகேஷ் சர்மா, பாரத ஸ்டேட் வங்கியின் ஜி.எஸ். ராணா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் ஏஐபிஇஏ சி.எச். வெங்கடாசலம், ஏஐபிஓசி ரூபம் ராய், என்சிபிஇ எல். சந்திரசேகர், ஏஐபிஓஏ சஞ்சய் கான், பிஇஎப்ஐ தேபாசிஷ் பாசு சவுத்ரி, ஐஎன்பிஓசி பிரேம் மக்கர், ஐஎன்பிஇஎப் ஓ.பி. சர்மா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வங்கி ஊழியர் சேனா மகாசங்கம் சார்பில் வினோத் நிகாம் சிறப்பு அழைப்பாளராக இடம்பெற்றுள்ளார்.

5 நாள் வங்கிப் பணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் இந்த உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் இன்று (செப்டம்பர் 30) நடைபெறுகிறது என்று UFBU தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share