ஃபகத்தின் கேங்ஸ்டர் அவதாரம் : ஆவேஷம் டீசர் வெளியானது!

Published On:

| By christopher

Fahadh Avesham Teaser Released

ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ரோமஞ்சம் படம் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில்  ‘ஆவேஷம்’ படம் தற்போது உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தமிழ் நடிகர் மன்சூர் அலிகான், சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி, மிதுன் ஜெய் ஷங்கர், ஹிப்ஸ்டர், மிதுட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அன்வர் ரஷீத் மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ஃபகத் ஃபாசிலின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்சன்- காமெடி கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ADVERTISEMENT

டீசரில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமஞ்சம் படம் பலரின் ஃபேவரைட் படமாக இருப்பதால் ஆவேஷம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

AAVESHAM Official Teaser | Jithu Madhavan | Fahadh Faasil | Sushin Shyam

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

பாலியல் வழக்கு : ராஜேஷ் தாஸூக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

‘தனித்து போட்டி’ : மம்தாவுக்கு காங்கிரஸ் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share