ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் பிரச்சாரம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

‘உங்கவீட்டுப் பிள்ளை ஸ்டாலின் வந்துருக்கேன்’ – இப்படிதான் ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டாவது நாளாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். வீடுவீடாகச் சென்று ‘முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்’ என்ற துண்டறிக்கையைக் கொடுத்தவர், ‘மழை வெள்ளப் பாதிப்பின்போது கண்டுகொள்ளாதவர்தான் ஜெயலலிதா. இன்று, தமிழகம் தத்தளிக்கக் காரணமே அவரின் மெத்தனம்தான். ஆனால், மக்களை நேரடியாக வந்து சந்திக்கிற ஒரே கட்சி திமுக தான். இது என்னுடைய முன்னாள் சொந்த தொகுதி. உங்களை நான் மறந்ததில்லை. நீங்களும் என்னை மறந்திருக்க மாட்டீர்கள்’ என வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் ஸ்டாலின். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜெவை வீட்டுக்கு அனுப்பும் மனநிலையில் உள்ளனர், இன்றைய வாக்காளர்கள். இந்தமுறை வெற்றி திமுகவுக்கே’ என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel