ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி (வீரா) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வீராசாமி ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தாம் லஞ்சம் வாங்கவே இல்லை என குற்றச்சாட்டுகளை வீராசாமி மறுத்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வீராசாமி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தன்னை மிரட்டி வீராசாமி பணம் கேட்டதாக ஒப்பந்ததாரர் தாழம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் வீராசாமியை போலீசார் நேற்று ஜூலை 15-ந் தேதி இரவு கைது செய்துள்ளனர்.
