டிஜிட்டல் திண்ணை: ஆக்‌ஷனில் அமலாக்கத் துறை.. ஆடிப் போன விஜயபாஸ்கர்கள்.. ‘ஆட்டம்’ காட்டிய எடப்பாடி

By Mathi

|

Published on 4 Nov 2026, 5:00 PM

வைஃபை ஆன் செய்ததும், ”துரை எழுந்து வந்தா பறையடி எகிறி வந்தா அடிதடி”ன்னு வைப் மோடில் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. செம்ம வைபில் இருக்கீங்க ப்ரோ..

ADVERTISEMENT

நம்மை சுத்தி நடக்குறது எல்லாம் நம்மை அப்படி ஆக்கிடுதுங்க ப்ரோ.. சிஎம் விஜய் இப்பதான் புதுக்கோட்டை, பெருந்துறை எல்லாம் போய்ட்டு வந்தாரு.. அதாவது இடைத்தேர்தல் நடக்க போற விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்னு 5 தொகுதிகளை டார்கெட் செஞ்சு சிஎம் விஜய் விசிட் அடிச்சுகிட்டு இருக்கிறார்..

நவம்பர் 2-ந் தேதி விஜய் புதுக்கோட்டைக்கு போனாரு.. விடிஞ்ச மறுநாள் நவம்பர் 3-ந் தேதி பத்திரிகைகளில் வந்த செய்தி, “முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்” அப்படிங்கிறதுதான்.

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில ஜெயிச்சு எம்.எல்.ஏ.வானார். ஆனா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு அதிமுகவில இருந்து விலகி தவெகவுக்கு போயிட்டார்.. அதனால விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப் போகுது… இதுக்காகதான் சிஎம் விஜய், விராலிமலை தொகுதி இருக்கிற புதுக்கோட்டை மாவட்டத்துக்கு விசிட் அடிச்சாரு..

இந்த நிலையிலதான் விஜய்க்கும் விஜயபாஸ்கருக்கும் ஷாக் கொடுக்கிற மாதிரி அமலாக்கத்துறை ஆக்‌ஷனில இறங்கி இருக்கு. இதுல ரொம்ப குஷி யாருக்குன்னா அதிமுகவுக்குதான்..

ADVERTISEMENT

அப்படியாங்க ப்ரோ.. முதலில்ல விஜயபாஸ்கர் மேல என்ன கேஸ்னு சொல்லிடுங்க..

சொல்றேன் ப்ரோ.. விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். 2016-ம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அவரும் அவரது மனைவி ரம்யாவும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக 2021-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செஞ்சது..

முதலில் ரூ.27.22 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பிறகு 2023-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சப்ப ரூ.35.79 கோடி-ன்னு சொல்லப்பட்டது.

இந்த வழக்கை அடிப்படையாக வெச்சுதான் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக தனி ரூட்டுல விசாரிக்குது.. போன 2024-ல் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமும் அவரது மனைவியிடமும் விசாரணையும் நடத்தியது. இப்ப இந்த கேஸில்தான் விஜய பாஸ்கருக்கும் அவரது மனைவிக்கும் நவம்பர் 6-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் வந்துருக்குங்க ப்ரோ..

விராலிமலை விஜயபாஸ்கருக்கு சம்மன் வந்ததால வருமான வரித்துறை கேஸ் பெண்டிங் இருக்கிற இன்னொரு மாஜி அதிமுக எம்.எல்.ஏ. கரூர் விஜயபாஸ்கரும் ரொம்ப ஷாக்கில்தான் இருகிறாராம் ப்ரோ.

ஓஹோ.. அதிமுகவுக்கு என்ன குஷி ப்ரோ?

அதிமுகவுக்கு துரோகம் செஞ்சுட்டு போனவங்களுக்கு சிக்கல்னா அந்த கட்சி தொண்டர்கள் குஷியாகத்தான் செய்வாங்க ப்ரோ.. ஆனா ‘விஜயபாஸ்கர்கள்’ விவகாரத்துக்கு காரணமே அதிமுக அப்படிங்கிறதுதான் இங்கே விஷயமே ப்ரோ..

என்னங்க ப்ரோ.. த்ரில்லர் மாதிரி சொல்றீங்க..

ஆமாங்க ப்ரோ.. இதை பத்தி அதிமுக சீனியர் லீடர்ஸ்கிட்ட நாம் பேசுனப்ப, விஜயபாஸ்கர்கள் மாதிரி கட்சிக்கு துரோகம் செஞ்சுட்டு போறவங்களால எங்க தொண்டர்கள் ரொம்பவே குமுறிட்டுதான் இருக்காங்க.. பொதுச்செயலாளர் எடப்பாடிகிட்டேயும் வேதனையை கொட்டுனாங்க.. இப்படியே நாம வேடிக்கை பார்க்கனுமா?ன்னும் தொண்டர்கள் சிலர் ஆவேசப்படவும் செஞ்சாங்க.

இந்த குமுறல் எல்லாத்தையும் எடப்பாடியும் பொறுமையே கேட்டுகிட்டுதான் இருந்தாரு.. இப்ப விராலிமலை, கரூர் உட்பட 5 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம்னு சூழ்நிலை இருக்குது.. அதனால களத்துல இறங்கிட்டார் எங்க பொதுச்செயலாளர்..

டெல்லிக்கு தொடர்பு கொண்டு, “அதிமுகவை விட்டு போன விராலிமலை, கரூர் விஜயபாஸ்கர்கள் மேல ஈடி, ஐடியில கேஸ்கள் பெண்டிங் இருக்கு.. இப்ப பை எலக்‌ஷன் நேரத்துல அவங்களுக்கு எதிராக ஆக்‌ஷன் எடுத்தா சரியா இருக்கும்..”ன்னு அழுத்தமாக சொல்லி இருந்தார்.. இப்ப அமலாக்கத்துறை விராலிமலை விஜயபாஸ்கர் பக்கம் இறங்கிடுச்சு. அடுத்து கரூரில் ஐடியும் களமிறங்கும் சார்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel