நேற்று மாலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். சந்திப்பின் போது ஓ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சி அலுவலகத்திற்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருவரும் இனி கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 10.30க்கு ‘ராகுகாலம்’ முடிந்த பின்னர் அமைச்சர்கள் இருவரும் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர். சுமார் ஒருமாத காலம் கடந்து இருவரும் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
‘ராகுகாலம்’ முடிந்து வந்தார் ஓ.பி.எஸ்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








