போங்க பாஸ், இது போங்கு – அப்டேட் குமாரு

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சென்னிமலையார் என ட்விட்டர் மக்களால் அழைக்கப்படும் சி.பி.செந்தில்குமார் ரொம்ப பேமஸ். அதுவும் அவரோட ஜோக்குகள் எல்லாம் அபாரமாய் இருக்கும். அவரோட ஜோக்குகளை படிச்சா இவருக்கு 70 ஆயிரம் ஃபாலோயர்ஸ்ன்னு ஆச்சர்யமாயிருக்கும். சினிமா விமர்சனம் தொடர்ந்து எழுதி வரும் சென்னிமலையார், வார இதழ்களுக்கு ஜோக்கும் எழுதி வருகிறார். அங்கு அனுப்பமுடியாத ஜோக்குகளை உடனுக்குடன் ட்விட்டரில் பகிர்வார். அதில் சில செலக்டிவ் ஜோக்குகள். 😛

// தலைவரே! மேடைல எல்லாரும் நின்னுட்டே பேசும்போது நீங்க மட்டும் உக்காந்துக்கறீங்களே?

ADVERTISEMENT

கிரிமினல்கள் தேர்தல்ல நிக்கக்கூடாதுன்னாங்க. அதான்//

//மிஸ்! அவனை மட்டும் லவ் பண்றீங்களே?என்னையும் லவ் பண்ணலாமில்ல?

ADVERTISEMENT

யோவ்.நான் என்ன பாமக.வா?தேமுதிக வா?5,வருசத்துக்கு ஒருக்கா மனசை மாத்த//

// தலைவரே! இது ரோசியோட மோதிரம்னு எதுக்கு பிரஸ் கிட்டே உளறினீங்க?

ADVERTISEMENT

இது ராசிக்கல் மோதிரமா?ன்னு கேட்டாங்க.ரோசியோட துன்ட்டேன் //

//ஆண்கள் BJP மாதிரி, எந்த ஃபிகர் வந்தாலும் ஐ லவ் யூ சொல்லிடுவாங்க, பொண்ணுங்க தேமுதிக மாதிரி, முரண்டு பண்ணி முடிவே சொல்லாம இழுத்தடிப்பாங்க//

//மிஸ்! சைட் அடிச்சா கூட கீழ குனிஞ்சு பாக்குறிங்க ஏன்?

லூசு. மேலே பார்த்தா சூரியகிரஹணம் இல்ல? //

இந்த ஜோக்குகளுக்கு வந்த ஒரு ரிப்ளை படிப்பவர்களின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையெல்லாம் தேவையே இல்லை. சாரோட ஜோக் ரெண்டை சொன்னா போதும்” .

***********************************************************************************************************

அதிமுக தொழிநுட்பப் பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபற்றி உண்மையாகவே இணையத்தில் அறிவிக்கப்படாத தொழில்நுட்பப் பிரிவாக செயல்பட்டுவரும் அதிமுக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், ஒரு விஷயம் கேள்விப்பட்டு எனக்கே அதிர்ச்சியா இருந்தது. அதாவது, அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் பெரும்பாலோருக்கு மெயில் ஐடி கூட இல்லையாம்! அவ்வளவு ஏன்? பேஸ் புக்குன்னா என்ன என்று கேட்கிறார்களாம்… அதிமுக முகநூல் நண்பர்கள் பிரிவில் இப்படியான ஒரு போஸ்ட்டை காண நேர்ந்தது. தைரியமாக தலைமையை விமர்சிக்கும் போக்கு எல்லாம் திமுக பக்கம்தான் பார்க்க முடியும். ஆச்சர்யகரமாக அதிமுக சைடுலையும் இத ஸ்டேட்டஸ்!

// தொழில் நுட்ப பிரிவு என்பது சோசியல் மீடியாவை உள்ளடக்கியது தான் என்ற நிலையில்

வெறும் வாட்சப் உடன் தனது வேலையை முடித்து கொண்டு இருக்கும் அதிமுக ஐ டி விங் பிரிவால்

எப்படி சபரிசன் கும்பலின் பலத்தை முறியடிக்க முடியும் ?

இல்லை அந்த கும்பலின் கைவரிசை இருக்கிறதா //

//அடிமட்ட தொண்டனோ , கடைநிலை தொண்டனோ என்றுமே விலை போனதாக சரித்திரம் இல்லை

அடிமட்ட தொண்டனை விலைக்கு வாங்க எந்த வியாபாரியும் இளிச்ச வாயன் இல்லை

விலைபோவது எப்பொழுதும் மேலே இருப்பதாக தான் இருக்கும்

அங்கெ மெயினை ஆப் செய்து விட்டால் , எல்லாமே எதிரிகளுக்கு ஜெயம் ஆக இருக்கும்

பொதுவா சொன்னேன்//

*************************************************************************************************************

கண்ணுல பார்க்கிறதையே நம்பாதேன்னு சொல்லும்போது, இந்த விஷயங்களுக்கு சொல்லவா வேணும்… நான் சொல்லவர்றது மேலே உள்ள போட்டோவைத்தான். அது ஒரு ட்ராபிக் போலீஸ் அதிகாரி. லைசன்ஸ் இல்லாமல் வண்டியோட்டியவர்களிடம் இருந்து ஸ்பாட் ஃபைன் வசூல் செய்து அதை, டூட்டி முடிந்தவுடன் சரிபார்த்துக் கொண்டிருக்கும் காட்சி. அதை படம்பிடித்த ஒரு புண்ணியவான் “நல்ல வசூல்” என்ற தலைப்பில் சோசியல் மீடியாவில் ஷேர்செய்ய தீயை விட வேகமாகப் பரவியது இப்படம்.

அவங்க சிலபேரு அப்படித்தான். அதுக்குன்னு இப்படியா பப்ளிக்கா இருப்பாங்க, போங்க பாஸ், இது போங்கு!

-லாக் ஆஃப்,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel