கோவையில் திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்பேரில், தலைமைக் கழக அனுமதியுடன் கழக இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை -வார்டு-பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1,50,000 நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும், தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் 58 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1,00,000 நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,
கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா எம்.பி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் வரவேற்புரையாற்றிட; மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா தலைவர் தாட்கோ, ப.அப்துல்மாலிக், பிரபு கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்ள;
வருகிற 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணி அளவில், கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் ‘ “மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெற உள்ளது.
இதில், மேற்குமண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை “மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரலாறு படைக்கப் போகும் இந்த “தி.மு.க. இளைஞர் அணி மேற்குமண்டல நிர்வாகிகள் சந்திப்பில்” அமைச்சர்கள் சு.முத்துசாமி. அர.சக்கரபாணி, டாக்டர் மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ்
மாவட்டச்செயலாளர்கள்/பொறுப்பாளர்களான தொ.அ.ரவி தளபதி முருகேசன், மேயர் என்.தினேஷ்குமார், க.செல்வராஜ், எம்.எல்.ஏ. இல.பத்மநாபன், என்.நல்லசிவம். கே.ஆர்.என்.இராஜேஷ்குமார்.எம்பி. கே.ஈஸ்வரசாமி,எம்.பி. கே.எம்.ராஜு, தோப்பு வெங்கடாசலம், கே.எஸ்.மூர்த்தி, துரை செந்தமிழ்செல்வன்; மாநகரச் செயலாளர்களான மு.சுப்பிரமணியம், டி.கே.டி நாகராசன், ஈ.தங்கராஜ், எஸ்.பி.கனகராஜ், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களான கணபதிராஜ்குமார், எம்.பி. கே.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ. ரா.இளங்கோ, எம்.எல்.ஏ. பி.ராமலிங்கம், எம்.எல்.ஏ. கே.சிவகாம சுந்தரி, எம்.எல்.ஏ, ஆர்.மாணிக்கம், எம்.எல்.ஏ. தென்மண்டல இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களான சபரிகார்த்திகேயன், எம்.ஏ.ஆர்.கே.ஹக்கீம், இரா.தனபால், மு.ஜெயக்குமார். ஜெதிருவாசகம், ஏ.திருவேங்கடம், சன் சுரேஷ். சி.விஸ்வநாத், ஆர்.பாலாஜி. வெங்கமேடு சக்திவேல், இமயம் சசிக்குமார், ரமேஷ், யுவராஜ் மாநகர அமைப்பாளர்களான எம்.எஸ்.ஆர்.ராஜூ, முத்துக்குமார். கே.டி.சேந்தபுகழன், கராத்தேபூபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் நன்றியுரையாற்றுகிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share