”திமுக ஆட்சி ஊழல் ஆட்சி” : அமித்ஷா முன்பு ஐசரி கணேசன் பேச்சு!

Published On:

| By Kavi

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 10) இரவு சென்னை வந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் வைத்து தமிழகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அமித்ஷாவை சந்தித்தனர்.

அவர்களை அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் செய்த சாதனைகளை அண்ணாமலை சுருக்கமாகச் சொல்ல பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அமித்ஷா.

ADVERTISEMENT

பிறகு ஒவ்வொருவரிடம் மைக் தரப்பட பிரபலங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இரவு 12.30 மணி வரை இந்த வாழ்த்தும் விமர்சனமும் நடைபெற்றது.

குறிப்பாக வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் உற்று பார்க்க வைத்தது. எடுத்த எடுப்பிலேயே ஐசரி கணேஷ்,

ADVERTISEMENT

“இந்த திமுக ஆட்சி ஊழல் ஆட்சி. தாங்க முடியாத ஊழல். நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மிக சரியான வழியில் தேர்தலைக் கொண்டு சென்றால், 20 இடங்களில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுக நிச்சயம் தோற்கும்” என்று படபடவென பேசினார்.

அதோடு, பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியையும் பாராட்டினார். ஐசரி கணேசனின் பேச்சு தமிழக அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.

ADVERTISEMENT

திமுக ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று ஐசரி கணேசன் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

பாஜக ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை! அமித்ஷா முன்பு பரபரப்பு பேச்சு!

சாம்பியன்ஸ் லீக்: முதன்முறையாக கோப்பையை வென்று மான்செஸ்டர் சிட்டி சாதனை!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share