சாம்பியன்ஸ் லீக்: முதன்முறையாக கோப்பையை வென்று மான்செஸ்டர் சிட்டி சாதனை!

விளையாட்டு

இண்டர் மிலன் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வென்று முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது.

நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி துருக்கி நாட்டில் இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் இன்டர் மிலன் அணியை எதிர்கொண்ட்து மான்செஸ்டர் சிட்டி.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே எதிரணியின் தற்காப்பை முறியடித்து கோல் அடிக்க போராடின. முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் இரண்டாவது பாதியின் 68வது நிமிடத்தில் கர்லிங் ஷாட் மூலம் அசந்த நேரத்தில் அற்புதமான கோல் அடித்த ரோட்ரி, மான்செஸ்டர் அணியை முன்னிலை பெற செய்தார்.

எனினும் இதற்கு பதிலடி கொடுக்க இண்டர் மிலன் அணி அனைத்து முயற்சிகளையும் முறியடித்த மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் கிளப் தொடங்கிய 143 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி.

பெப் கார்டியோலா தலைமையிலான மான்செஸ்டர் நடப்பாண்டில் பிரீமியர் லீக், எஃப்ஏ கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்வெட்டு: அண்ணாமலை பேட்டி!

நெம்மேலியில் கடல்நீரை கொண்டுவரும் இந்தியாவின் மிகப் பெரிய 1,035 மீட்டர் குழாய்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *