மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பிரபலங்கள் நேற்று இரவு 10 மணியளவில் சந்தித்தனர்.
அமித்ஷா தங்கிய கிண்டி ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் பிரபலங்களை அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொருவரும் 2 நிமிடம் முதல் 5நிமிடம் வரை பேசினர். ஆங்கிலத்திலும் இந்தியிலும் பலர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள்.
திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி நான் தமிழில்தான் பேசுவேன் என்றார்.
அண்ணாமலையுடனிருக்கும் ஶ்ரீகாந்த், செல்வமணி பேச்சை மொழிபெயர்த்தார்.
தனது பாணியில் பேச்சை ஆரம்பித்த செல்வமணி ஒரு கட்டத்தில் “தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை.
தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இங்கு கட்சியை நடத்துகிறார்கள். காசியாத்திரையெல்லாம் இங்கு எடுபடவில்லை. நீங்க ஏமாந்துடாதீங்க “எனப்பேசப்பேச எல்லோரும் அண்ணாமலையையே உற்றுப்பார்த்திருக்கிறார்கள்.
சாம்பியன்ஸ் லீக்: முதன்முறையாக கோப்பையை வென்று மான்செஸ்டர் சிட்டி சாதனை!
நெம்மேலியில் கடல்நீரை கொண்டுவரும் இந்தியாவின் மிகப் பெரிய 1,035 மீட்டர் குழாய்!