“கட்சிகளை உடைப்பது திமுகவுக்கு கைவந்த தொழில்” – வைகோ

Published On:

| By Balaji

தேமுதிகவில் இருந்து அதிருப்தி அணியினர் சந்திரகுமார் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்த அதே நேரத்தில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று அழைப்பு. வைகோவின் செய்தியாளர் சந்திப்பின் நோக்கம் தேமுதிக உடைப்பிற்கு கருணாநிதியும் , ஸ்டாலினுமே காரணம் என்று விளக்குவதும் தனது கடந்த கால அனுபவங்களோடு அதை நிறுவுவதுமே ஊடகச் சந்திப்பின் நோக்கமாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் முன் கூட்டியே பேசிக்கொண்டு பொடி நடையாக தாயகம் சென்றார்கள்.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான திருமாவளவன், சிபிஎம் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அமைதியாக இருக்க வைகோ திமுகவுக்கு எதிராக பொங்கித் தீர்த்து விட்டார். “கட்சிகளை உடைப்பது திமுகவுக்கு கைவந்த தொழில். கலைஞருக்கு இதுதான் வேலை. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சந்திரகுமார் சிறப்பாகப் பேசினார். திமுகவையும், அதிமுகவையும் சேர்த்து வைத்து விமர்சித்துவிட்டு இப்போது இப்படி பேசுகிறார். பச்சைத் துரோகி அவர்” என்றார் வைகோ.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share