திமுக செயற்குழுவில் அதிரடி தீர்மானம்: மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?

Published On:

| By Mathi

DMK Dis Secs

திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.

சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.

ADVERTISEMENT

அதில், “வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும் போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில் திமுகவில் தற்போது 70 வயதை கடந்த 13 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இந்த 13 பேரும் மாவட்ட செயலாளர் பதவியை இழக்கின்றனர்.

ADVERTISEMENT

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை இழக்கும் 13 பேர்:

  1. க. சுந்தர்- காஞ்சிபுரம் தெற்கு- வயது 72
  2. ஆர். காந்தி- இராணிப்பேட்டை- வயது 80
  3. எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு- வயது 75
  4. செஞ்சி மஸ்தான்-விழுப்புரம் வடக்கு- வயது 71
  5. எஸ்.ஆர். சிவலிங்கம்- சேலம் கிழக்கு- வயது 75
  6. சு. முத்துசாமி- ஈரோடு தெற்கு- வயது 77
  7. சாக்கோட்டை க. அன்பழகன்- தஞ்சாவூர் வடக்குவயது 72
  8. ரகுபதி- புதுக்கோட்டை தெற்கு- வயது 76
  9. கோ. தளபதி- மதுரை மாநகர்- வயது 70
  10. நா. இராமகிருஷ்ணன்- தேனி தெற்கு- வயது 77
  11. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்- வயது 77
  12. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்-தூத்துக்குடி தெற்கு- வயது 74
  13. இரா. ஆவுடையப்பன்- திருநெல்வேலி மேற்கு- வயது-81
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share