பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 3 ஆண்டுகளில் பதவியில் இருந்து விலகுவார்; இந்தியாவைப் போல தீண்டாமை, பால்ய விவகாரம் என்கிற அசிங்கமான கலாசாரம் உலகில் எங்கேயும் இருந்தது இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் (Actor Prakash Raj) விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற்ற அரசியல் சாசன பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது: நாம் நிறைய பேசுறோம். திருந்தவே மாட்டேன்னு சொல்ற திருட்டுப் பசங்களை பேசி திருத்த முடியாது. ”இறக்கனும்”.
அவ்வளவுதானே இருக்கு? டெமாக்ரசி இருக்குன்னு பேசிக்கிட்டு இருக்கோம் நம்ம. இன்னைக்கு டெமாக்ரசி இல்ல. உலகத்துல எங்கேயும் இல்ல.

டெமாக்ரசிங்கிறது எலக்ஷன் வரைக்கும் மட்டும்தான் இருக்கு. மக்கள் தேர்ந்தெடுக்கிறதுக்கு மட்டும்தான். அதற்குப் பிறகு, அன்னைக்கு பட்டாபிஷேகம், இன்னைக்கு பிரமாண வசனம். அன்னைக்கு சிம்மாசனம், இன்னைக்கு நாற்காலி. விடமாட்டானுங்களே…
இல்லையா?
இதற்கு காரணம் இப்ப வந்தவங்க இல்ல. சுதந்திரம் வந்துட்ட பிறகு இருந்தவங்க எல்லாரும்தான். மக்களை எங்க வைக்கணுமோ அங்கேயே வச்சிருக்கானுங்க.
ஆனா சுதந்திரம் வந்ததுக்கு பிறகு எங்களுக்கு இருந்தது எங்களுடைய கான்ஸ்டிடியூஷன். சமீபமா நான் ஒரு நண்பனோட வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்ல அம்பேத்கர் சாரோட போட்டோகிராப் இருந்தது. என் பக்கத்துல இருக்க நண்பன் சொன்னான், ‘பிரகாஷ், இது தலித்து வீடுன்னு நினைக்கிறேன்னா’ன்னா. எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிடுச்சு. அம்பேத்கர் எழுதின கான்ஸ்டிடியூஷன் தலித்துக்கு இல்ல, எல்லாருக்கும்.
அம்பேத்கர் எழுதின கான்ஸ்டிடியூஷன் பிரிட்டிஷ் விட்டுப் போனதுக்கு அப்புறம் பிறந்த இந்தியாவுக்கு இல்ல. இப்ப இந்த கான்ஸ்டிடியூஷனை திருத்தணும்னு இருக்காங்களே இந்த திருட்டுப் பசங்க, இவனுங்க 3000 வருஷங்களா இருக்கானுங்க.

பல்லாயிரம் வருஷங்கள் இருந்திருக்கிற இந்த திருட்டுப் பசங்க மீண்டும் வந்துரக்கூடாதுன்னு எழுதின கான்ஸ்டிடியூஷன் இது.
இந்த திருட்டுப் பசங்க, ‘எங்களுடைய நாடு அவ்வளவு அற்புதமா இருந்தது, பொன் இருந்தது, அது இருந்தது’ன்னு பொய்.
ஒரு 2000, 3000 வருடங்களா இந்தியா மாதிரியான ஒரு அசிங்கமான கலாச்சாரம் உலகத்துல எங்கேயும் இல்ல.
இவனைத் தொடக்கூடாது, பெண்களுக்கு உரிமை இல்ல, பால்ய விவாகம் அசிங்கமா இருந்த நாடு. பிரிட்டிஷ்காரன் வந்து அதை அப்படியே இருக்கிற மாதிரி பாத்துகிட்டான். ஏதோ சில மன்னர்கள், பணக்காரங்க நிம்மதியா இருந்தாங்களே தவிர, சராசரி மனிதன், ஒரு குடிமகன் ரொம்ப கஷ்டமா வாழ்ந்த கலாச்சாரம் இது.
அதிலிருந்து நம்மள தப்பிக்க வைக்கிறதுக்குத்தான் இவரு சார் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு கான்ஸ்டிடியூஷனை எழுதியிருக்காங்க. ஆனா அந்த புத்தி போகாதுல்ல. அதை மீண்டும் அந்த மனுவாதத்தை எடுத்து வந்துடலாம்னு.
ஆனா பாபாசாகேப் எழுதின கான்ஸ்டிடியூஷன்ல என்ன ஆயிடுச்சுன்னா, இந்த நாட்டை வந்து மாத்திடலாம். ராணுவத்தை எடுத்துட்டு வந்துன்னு நீங்க கரெக்டா பாத்தீங்கன்னா, பாகிஸ்தான், பங்களாதேஷ்ல ராணுவம் வந்துருது. ஆனா இங்க வர முடியாது.
ஒரு தவளையை நீங்க வந்து கொதிக்கிற தண்ணி மேல போட்டா டப்புன்னு வெளிய போயிடும். இந்த திருட்டுப் பசங்க என்ன பண்ணிருக்காங்கன்னா, சில்லுன்னு இருக்கிற ஒரு பாத்திரத்துல இந்த தவளையை விட்டு கீழே நெருப்பு வச்சிருக்கானுங்க.
கடந்த 15 வருஷம் நான் அட்ஜஸ்ட் ஆயிடுச்சு, சூடானதே தெரியாது, இப்போ தள்ளிட நேரம் வந்துடுச்சு. அதற்கு ரொம்ப சந்தோஷம் என்னன்னா, ரீசண்டா எனக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு. இப்பலாம் நான் வந்து அவங்கள பத்தி கவலைப்பட மாட்டேன்.
போற நேரம் வந்தாச்சு.
இளைஞர்கள் வந்துட்டானுங்க. அவனுங்க தள்ளுவானுங்க.. அவனுங்க போவானுங்க. இன்னைக்கு இளைஞர்கள் என்ன பண்ணிருக்காங்கன்னா, உங்களுக்கு வந்து என்னோட காட்டோட ஒரு கதையை சொல்லிடுவேன்.
நாங்க மனிதர்கள் பேசிக்கிற மாதிரி காட்டுல உயிரினங்கள் எப்படி பேசுது? அப்படின்னு ஒரு பேசிட்டு இருக்கோம்.
என்னுடைய சயின்டிஸ்ட் ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான், ‘டேய், காட்டுல வந்து மானு மானோட, புலி புலியோட பேசுதுன்னு நம்ம நினைக்கிறோம், அது நம்மள மாதிரி இல்ல, ஒன்னு பேசும், மத்தது கேட்டு புரிஞ்சுக்கும்.
சோ, ஒரு புலி ஒரு மானை புடிக்க வரும்போது நேரடியா வராது அது.
ஒரு 20, 40 புலி வந்து மான் மேஞ்சிட்டு இருக்கும்போது நிதானமா வரும்.
சத்தம் கேட்கக்கூடாது.
காற்று இந்த பக்கத்துல வந்தா என்னுடைய மனம் அந்த மான்கிட்ட போய் அதுக்கு தெரிஞ்சிடும்னு கிட்டத்தட்ட பல மணி நேரம் பொறுமையா வரும்.
திடீர்னு ஒரு மானுக்கு தெரிஞ்சு போயிடும்.
அதோட காது இப்படி ஆடும். மூக்கு இப்படி பிடிக்கும்.
‘காக்’ அப்படின்னும் ஒரு மான்.
அது ‘காக்’ன்னு எப்படி சொல்லும்போது, அந்த புலி வேட்டையாட வந்த புலியை பார்த்து ஒரு அடி முன்னாடி வச்சு ‘காக்’ அப்படின்னு சொல்லும்.
நம்ம எல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், அது மத்த மான்களுக்கு புலி வந்துடுச்சுன்னு சொல்லிட்டு இருக்குன்னு.
இல்ல, அது புலிக்கு சொல்லுது, ‘டேய், உன்ன பாத்துட்டேன்.’
அப்போ அந்த புலி, ‘ம்’ என்றது.
இன்னைக்கு இந்தியாவின் மக்கள், இளைஞர்கள், ‘மோதி, உன்ன பாத்துட்டேன்னு சொல்றாங்க.’ பயந்துட்டான்.
ரீல்ஸ் பண்றாரு சார் இப்போ. ரீல்ஸ் பண்றாரு… ராஜினாமா பண்றாங்க.

இளைஞர்களைப் பத்தி நம்பாதீங்கன்னு நீங்கள் சொன்னீங்க, நான் இந்த இளைஞர்களை நம்புறேன். ஏன்னா, அவன் இன்னொரு அரசியல்வாதி இல்ல. கடைசியா ஒரே ஒரு வார்த்தையை சொல்றேன். பாபாசாகேப் அம்பேத்கர் எழுதின கான்ஸ்டிடியூஷன் பிரகாரம், ஒழுங்கா நீங்க அதை படிச்சீங்கன்னா, அதை உணர்ந்தீங்கன்னா, இந்தியாவில அரசியல் செய்ய வேண்டியது நாம, நம்ம மக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவன் வேலை பாக்கணும்.
ஆனா, தேர்ந்தெடுக்கப்பட்டவன் அரசியலை பண்ணிக்கிட்டு இருக்கான், நம்ம வேலை பார்த்துட்டு இருக்கோம், இதை மாத்தணும். நம்ம யாரும் அரசியல்வாதியாக வேண்டிய அவசியமில்லை, அரசியல் கட்சியாக வேண்டிய அவசியமில்லை. ஒரு குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவனை கேள்வி கேட்கிறதுக்கு இருக்காங்க மக்கள்.
வேலை செய்யலன்னா இறக்குவாங்கிற பயத்தை உருவாக்கினால் போதும்.
அதைத்தான் நம்ம செய்ய வேண்டியது, அதான் இன்னைக்கு இளைஞர் பண்ணிருக்காங்க.
ஆனால் ஒன்னு, நம்ம இந்த காலகட்டத்துல ரொம்ப யோசிக்க வேண்டியது, பிஜேபி, இந்த பாசிஸ்ட் மன்னர் இன்னொரு மூணு வருஷத்துல இறங்குவாங்க. ஆனா, இந்திய அரசியல்ல நீங்க புரிய வேண்டியது, எதிர்க்கட்சி ஜெயிக்காது, ஆளுங்கட்சிதான் கீழே விழும். இவனுங்களை மக்கள் தள்ளுவானுங்க.
ஆனா, தள்ளுற இந்த நேரத்துல அவனுக்கு பதிலா வரவேண்டியவன், நம்ம இவன் மேல இருக்கிற வெறுப்புல கீழே இறக்கி இருக்கோமே தவிர, அடுத்தவனை சிந்திச்சு நாங்க வந்து தேர்ந்தெடுக்கல. அது ஆகுறதுக்கு இன்னும் 10, 15 ஆண்டுகள் வேண்டும். இன்றைய தலைமுறை யோசிச்சுக்கிட்டு இருக்கு, அவர்களை வலுவாக்க, அரசியல் அறிவை வளர்க்க, இன்னொரு 10, 15 வருஷம் நம்ம வேலை பார்க்க வேண்டிய வேலை இருக்கு. இது கேன்சர், அசிங்கமான ரோகம், வியாதி, இதை இறக்கிடுவோம். மத்த வியாதிகளையும் சரி பண்ணுவோம். இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார்.
