சென்னை திரும்பிய ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

Published On:

| By Mathi

DMK Chief M.K. Stalin Receives Enthusiastic Welcome in Chennai

லண்டன் பயணத்தை முடித்து விட்டு இன்று ஜூலை 19-ந் தேதி இரவு சென்னை திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

மு.க.ஸ்டாலின் பேரனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மகனுமான இன்பநிதி, லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கடந்த 4-ந் தேதி ஸ்டாலின், மனைவி துர்காவுடன் லண்டன் சென்றார்.

ADVERTISEMENT

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பெருந்திரளாக திரண்ட திமுகவினர், ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

முன்னதாக இன்று காலை 7 மணியளவில் ஸ்டாலின், வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் காலையிலேயே திமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர். பின்னர், விமானத்தை மிஸ் செய்துவிட்டதாகவும் இரவு 8 மணிக்கு மேல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திமுகவினர் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

படங்கள்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share