முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி விவகாரத்தில் சென்னை சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு ரூ.2.82 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை போலீசார் இன்று ஜூலை 19-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஒரு தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையின் அடிப்படையில், சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹2,82,49,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இந்த தொகை தவெக MLA-விற்கு வழங்கப்படவிருந்த முன்பணமாக ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
