‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

By Minnambalam

|

Published on 16 Nov 2024, 8:29 AM

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் நேற்று (நவம்பர் 15) காலமானார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை’ மனு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இப்படத்தில் விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மர்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

கோவிலில் கிடா வெட்டுக்காக சென்ற ஒரு குடும்பம் கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளும் சம்பவம் தான் இப்படத்தின் கதைக்களம். தனது முதல் படத்திலேயே பரவலான கவனத்தைப் பெற்றார் சுரேஷ் சங்கையா.

ADVERTISEMENT

இதனையடுத்து 2023-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ‘சத்திய சோதனை’ படம் வெளியானது. இதில் பிரேம்ஜி, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்டோர் நடத்திருந்தனர். ஒரு கிராமத்தில் நடக்கும் கொலையை அங்குள்ள காவல் அதிகாரிகள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து மக்களுக்கு காட்சிப்படுத்தியிருப்பார் சுரேஷ் சங்கையா.

அதன்பிறகு அவர் இயக்கத்தில் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில், கல்லீரல் செயழிலப்பு காரணமாக சுரேஷ் சங்கையா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ் சங்கையாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டார்கெட் 200: அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel