வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று (நவம்பர் 15) கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஜெயங்கொண்டம், மகிமைபுரத்தில் ‘சிப்காட்’ தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார். கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவசங்கர், கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமுமில்லை. அதனால் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும்.
அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் யாரேனும் ஒருவர் பயனடைந்திருக்கிறார்கள். இளைஞர்கள், பெண்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு செல்லுங்கள்.
குறிப்பாக பெண் வாக்காளர்களை சந்தித்து மகளிர் உரிமை திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும். அது உங்களது பொறுப்பு. அதற்காக வியூகம் அமைத்து செயல்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?
டாப் 10 நியூஸ்: மோடி வெளிநாடு பயணம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரை!