டிஜிட்டல் திண்ணை: ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்.. வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ.. நெருக்கடியில் 2 அமைச்சர்கள்..அதிரும் கோட்டை.. என்ன நடந்தது?

By Minnambalam Desk

|

Published on 11 Nov 2026, 8:53 AM

Digital Thinnai_ TVK MLA

வைஃபை ஆன் செய்ததும், ”சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்.. தீமைகள் செய்பவன் அழுகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

ப்ரோ.. களத்துக்குள்ள வரும்போதே தத்துவ பாடலோடு வர்றீங்களே?

ப்ரோ.. எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எழுதின பாடலா இருந்தாலும் அடங்காத மனிதர்கள் இருக்கும் வரை அதன் தேவையும் இருக்கும்தானே ப்ரோ..

ADVERTISEMENT

ஆஹா.. இன்னைக்கு ‘வாத்தி ரெய்டு’ மாதிரி கிளாஸ் எடுக்கிறீங்களே..

ஆமா ப்ரோ.. விஜய்யின் தவெக ஆட்சி 6 மாசத்தை நிறைவு செஞ்சிருந்தாலும் நாளுக்கு நாள் பிரச்சனைகள் என்னவோ தினுசு தினுசா வந்துகிட்டே இருக்குது.. தீபாவளி டைம்ல 15, 16 கொலைகள் நடந்துச்சு.. இதுக்கு பதில் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன், “தீபாவளி கொலைகள் புதிதல்ல”ன்னு விளக்கம் சொல்ல போய் வில்லங்கமாகிடுச்சு..

அதோட தீபாவளி பட்டாசுகளோட தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரமும் ஆட்சிக்கு வெச்சிருக்கிற “அணுகுண்டா” வெடிச்சுகிட்டே இருக்குங்க ப்ரோ..

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்.. இவர்தான் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பின விவகாரத்துல சிக்கினவர்.

கலெக்டர் பத்மஜா, எம்.டெக் பயோ டெக்னாலஜி படிச்சவங்க.. சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி 2017-ம் வருஷம் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் ஆனவங்க.. இவங்க கணவர் ஷேக் அப்துல் ரஹ்மானும் கலெக்டர்தான்.. அதுவும் பக்கத்து மாவட்டமான விழுப்புரம் ஆட்சியர்.. இவரும் 2017-ம் வருஷம் தமிழக கேடர் ஐஏஎஸ்.. சிவில் சர்வீஸ் கோச்சிங் படிக்கும் போது லவ் பண்ணி திருமணம் செஞ்சுகிட்டவங்க.. கடலூரில் ஷேக் அப்துல் ரஹ்மான் கலெக்ட்ரா இருந்தப்ப கடலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தவங்க அவர் மனைவி பத்மஜா ஐஏஎஸ்.. விழுப்புரம் ஆட்சியராக ஷேப் அதுல் ரஹ்மானும் விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக பத்மஜாவும் பணிபுரிஞ்சாங்க.. அதுக்கு பிறகுதான் கள்ளக்குறிச்சி கலெக்ட்ரா அப்பாயிண்ட்மென்ட் ஆனாங்க பத்மஜா.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் என்னதான் மெசேஜ் போட்டாரு? என்னதான் பிரச்சனைக்கு நாம விசாரிச்சப்ப, “கலெக்டர் மொபைலுக்கு அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.கிட்ட இருந்து முதலில் ஒரு மெசேஜ் போனது. பொதுவான நலம் விசாரிப்பு மெசேஜா அது இருந்துச்சு.. இதற்கு பிறகும் மெசேஜ்கள் போட்டபடியே இருந்தார்..

என்னடா ஒரு எம்.எல்.ஏ., ஒரு கலெக்டருக்கு இப்படியா மெசேஜ் போடுவாருன்னு ரொம்பவே அதிர்ச்சி அடைந்துட்டாங்க கலெக்டர் பத்மஜா. இதை பத்தி விழுப்புரம் பொறுப்பு அமைச்சரான வன்னி அரசுவிடம் முதலில் கம்ப்ளெயிண்ட் பண்ணினாங்க.. ஆனால் அவரு இதை கண்டுக்கலை..

இதுக்கு பிறகு விழுப்புரம் பொறுப்பு அமைச்சரான புஸ்ஸி ஆனந்த்கிட்ட, கலெக்டரின் கணவரான விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் புகார் சொன்னார்.. இதுல அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ஆனந்த், “இனிமேல் இப்படி மெசேஜ் போட்டா சுட்டுட சொல்லுங்க சார்”ன்னு கோபத்தை காட்டினார்.

ஆனாலும் போன ஆகஸ்ட் 2-ந் தேதி இதே மாதிரி திரும்பவும் ஆபாச மெசேஜை கலெக்டருக்கு அனுப்பினார் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ். இதுல ரொம்பவே கடுப்பான விழுப்புரம் கலெக்டர், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யை கூப்பிட்டு விஷயத்தை சொல்றாரு.. அவங்களுக்கு மட்டும் ஷாக் ஆகாதா என்ன? எஸ்பி ஒரு டீமை அனுப்பி, அருள் விக்னேஷ் எந்த இடத்துல இருக்கிறார்னு செக் பண்ணினாங்க.. அப்ப எம்.எல்.ஏ. ஆபீஸில் உட்கார்ந்துகிட்டுதான் இப்படி மெசேஜ் அனுப்பினாருன்னு தெரிய வந்தது..

இதுக்கு இடையில, ”நாம போட்ட மெசேஜ் புஸ்ஸி வரைக்கும் போயிடுச்சேன்”ன்னு பதறின எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அவரை பார்க்க புதுச்சேரிக்கு ஓடினார்.. அங்க போய், புஸ்ஸி ஆனந்த்கிட்ட ரொம்பவே கெஞ்சி ”இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்துங்க அண்ணா’ன்னு கதறிட்டார் அருள் விக்னேஷ்.. அதோட புஸ்ஸி ஆனந்த் ஆக்‌ஷனும் ஓவர்னு நின்னுடுச்சு..

இதனால் கலெக்டர் தம்பதிக்கு கோபம் அதிகமானது.. இப்படிப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தண்டனை கொடுத்தாகனும்னு முடிவோட தலைமை செயலாளருக்கு அப்பீசியலாகவே கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டாங்க.. அதனாலதான் இந்த விவகாரமே வெளியே வந்துச்சு..”ன்னு சொல்றாங்க ப்ரோ..

அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது சட்டப்படி ஆக்‌ஷன் எடுக்க முடியாதா ப்ரோ?

என்னங்க ப்ரோ இப்படி கேட்டுட்டீங்க.. இதை பத்தி நாம மூத்த வழக்கறிஞர்களிடம் பேசுனப்ப, “பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி இருந்தது உறுதியானால் நிச்சயம் தண்டனை உண்டு. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ல் செக்‌ஷன் 75, 79-ல் இதை பத்தி விரிவாகவே சொல்லி இருக்காங்க.. இந்த செக்‌ஷனில் அதிகபட்சமாக 3 வருஷம் ஜெயில் தண்டனை; பாலியல் ரீதியாக மெசேஜ் மாதிரி போட்டிருந்தா அதிகபட்சம் 1 வருஷம் ஜெயில் தண்டனைன்னு இருக்குது.

அதோட இப்படியான புகார்கள் வந்தும் அதை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறைக்க முயற்சித்தவங்க மேலே BNS 239-ன் கீழ் அதாவது சட்டப்படி குற்றத் தகவலைத் தெரிவிக்க வேண்டிய கடமை இருந்தும் வேண்டுமென்றே தெரிவிக்காமல் இருந்தால், அதிகபட்சம் 6 மாதங்கள் சிறை அல்லது ₹5,000 அபராதம் அல்லது இரண்டும்; BNS 249-ல் குற்றம் செய்ததாகத் தெரிந்த நபரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் மறைத்து வைத்திருந்தால், அடிப்படைக் குற்றத்தின் அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள் எனில், அதிகபட்சம் 9 மாதங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்னு சட்டம் சொல்லுது.. ”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இதனால தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு மட்டுமல்ல.. இந்த விஷயம் தெரிந்தும் அருள் விக்னேஷ் மீது புகார் கொடுக்காமல் மறைச்ச அமைச்சர்கள் வன்னி அரசு, புஸ்ஸி ஆனந்துக்கும் சிக்கல் சேர்ந்தே இருக்குதுன்னுதான் சீனியர் வக்கீல்கள் சொல்றாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. சிஎம் விஜய் என்ன சொல்றாராம்?

ப்ரோ.. இவரு ஒருத்தர்தான் பிரச்சனையா? சட்டசபை துணை சபாநாயகர் ரவிசங்கர், தொகுதிக்காரர் ஒருத்தரை ரவுண்டு கட்டி வெளுத்துவிட்டிருக்கிறார். அந்த வீடியோவும் வெளியாகி இருச்சு.. அதோட, ரவி சங்கரும் போலீசாரும் மிரட்டி சமாதான வீடியோ போட வெச்சுங்கான்னும் போட்டுடைச்சுட்டாரு அடிவாங்குன துறையூர் கார்த்திக் குமார்.. இதனால துணை சபாநாயகர் ரவி சங்கருக்கும் சிக்கல்தான்..

ஒரு பக்கம் ‘தீபாவளி கொலைகள்’ அடுத்தடுத்து விழுது.. 2,3 நாட்களில் 15, 16-ன்னு கொலைகள் நடந்துகிட்டு இருக்கு.. இதுக்கு நடுவுல ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் அனுப்புற ஆளும் கட்சி எம்.எல்.ஏ, ஓட்டுப் போட்டவரை அடிச்சு வெளுக்கிற துணை சபாநாயகர்னு திரும்புன பக்கமெல்லாம் ‘கண்ணி வெடி’ கதையா இருக்குது.. இதனால இன்னைக்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சிஎம் விஜய் கூட்டி இருக்கிறார் ப்ரோ..

என்னதான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி வார்னிங் கொடுத்தாலும் பிரச்சனை ஓயுமான்னுதான் தெரியலை.. ஏன்னா ஆட்சியரையே சீண்டி பார்த்த எம்.எல்.ஏ., அவரை பாதுகாக்கிற அமைச்சர்கள்னு நிலைமை மோசமா இருக்கிறதால ஐஏஎஸ் ஆபீசர்ஸ் சங்கம் அடுத்து என்ன செய்யும்? அவங்களோட அறிக்கை எப்ப வரும்?னு கோட்டையில ரொம்பவே பக் பக்-ன்னு இருக்காங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel