ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுங்க.. காங்.எம்.பி. சுதா வலியுறுத்தல்!

By Mathi

|

Published on 11 Nov 2026, 3:46 AM

Congress Sudha-TVK

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுதா எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அனுப்பிய தரம் தாழ்ந்த மலிவான குறுஞ்செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இது சம்பந்தமாக விசாரணை செய்து தவறு இழைத்த சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

இந்திய குடியுரிமைப் பணி என்பது தேசத்தில் மிக உயரிய பொறுப்பாகும்.
அப்பொறுப்பில் இருக்கும் பெண் ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கே இப்படிப்பட்ட தர்மச் சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருப்பது, அவரின் மனம் புண்படும் வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையிலும் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாது. மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எல்லா தலங்களிலும் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுடைய தவறான செயல்பாடுகள் ஆட்சிக்கும் முதல்வரின் உயர்ந்த நோக்கத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது,

ADVERTISEMENT

எனவே அனைத்துத் துறைகளிலும் பணியாற்றிவரும் பெண்கள் எதிர்வரும் காலங்களில் அச்சப்படாத வகையில் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுகிறோம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு காங்கிரஸ் எம்.பி. சுதா தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel